மிட்டாய்

மிட்டாய் (Candy) என்பது சர்க்கரையை முதன்மை மூலப்பொருளாகக் கொண்ட இனிப்பு என வரையறை செய்தாலும் மிட்டாய் என்பதனை முழுமையாக வரையறை செய்வது கடினமாக கருதப்படுகிறது.[1] இன்னட்டுகள் (Chocolates), மெல்லும் கோந்து (chewing gums) மற்றும் இனிப்பு மிட்டாய் போன்றவை இனிப்புத் தின்பண்டங்கள் என்ற வகையின் கீழ் வருகின்றன. காய்கறிகள், பழங்கள் அல்லது கொட்டைகள் இனிப்பு அல்லது சர்க்கரை முலாம் பூசப்பட்டு இனிப்பூட்டப்பட்ட மிட்டாய்களாகவும் விற்கப்படுகின்றன.

மிட்டாய்
சிரியாவின் டமாசுக்கசு நகரிலுள்ள ஒரு கடையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மிட்டாய் வகைகள்
மாற்றுப் பெயர்கள்இனிப்பு அல்லது லாலி
வகைஇனிப்புத் தின்பண்டம்
முக்கிய சேர்பொருட்கள்இனிப்பு அல்லது தேன்

வரையறை தொகு

இயற்பியல் ரீதியாக சர்க்கரை அல்லது சர்க்கரை உபபொருட்களைப் பயன்படுத்தும் குறிப்பிடத்தக்க அளவைப் பொருத்து மிட்டாய்கள் வகைப்படுத்தப்படுகின்றன. மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு கேக் அல்லது ரொட்டி போலல்லாமல், மிட்டாய்கள் வழக்கமாக சிறிய துண்டுகளாக தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும் மக்கள் எவ்வாறு உணவாகக் கொள்கிறார்கள் அல்லது பாவிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மிட்டாய்க்கான வரையறை அமைகிறது. பொதுவாக இனிப்புப் பண்டங்கள் உணவுக்குப்பின் வழங்கப்படும் பழவகை உணவில் (டெசர்ட்) சாதாரணமாக பரிமாறப்படுகிறது. ஆனால் மிட்டாய் சாப்பாட்டுக்கிடையில் நொறுக்குத் தின்பண்டமாக உண்ணப்படுகிறது. [2].

வகைப்பாடுகள் தொகு

வன் மிட்டாய் (hard candies), மென் மிட்டாய் (soft candies), கேரமல் (caramel), பஞ்சுப்பொதி மிட்டாய் (மார்சுமெல்லோ) (marshmallows) , டாபி (taffy) போன்ற இனிப்பு மிட்டாய்களின் முக்கிய மூலப்பொருள் சர்க்கரையாகும். சர்க்கரை மிட்டாய்களில் உள்ள சர்க்கரையின் அளவைப் பொறுத்தும் அவற்றின் வேதிய அமைப்பைப் பொறுத்தும் வணிக ரீதியாக பல குழுக்களாக பிரிக்கப்படுகின்றன.[3].

பட ஒப்பீடு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Davidson, Alan (2014). The Oxford Companion to Food. Oxford University Press. p. 213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199677337.
  2. Richardson, Tim H. (2002). Sweets: A History of Candy. Bloomsbury USA. pp. 53–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58234-229-6.
  3. McWilliams, Margaret (2007). Nutrition and Dietetics' 2007 Edition. Rex Bookstore, Inc. pp. 177–184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-971-23-4738-2.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மிட்டாய்&oldid=3720373" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதேம்பாவணிசிறப்பு:Searchதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்முத்தொள்ளாயிரம்அண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குதமிழ்நிர்மலா சீதாராமன்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைவரலாறுதிருக்குறள்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாவேந்தர் பாரதிதாசன் விருதுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்பதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புலோ. முருகன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐஞ்சிறு காப்பியங்கள்தக்கன்ஒப்பிலக்கியம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பெண் தமிழ்ப் பெயர்கள்மரபுச்சொற்கள்திருவள்ளுவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தனிமங்களின் எண் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவை