பல்நிறைவுறாக் கொழுப்பு

(பல்நிறைவுறா கொழுப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பல்நிறைவுறா கொழுப்பு (polyunsaturated fat) என்னும் கொழுப்பு அமில மூலக்கூறுகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட கார்பன்-கார்பன் இரட்டைப்பிணைப்புகள் காணப்படுகின்றன[1]. அதாவது, இத்தகு மூலக்கூறுகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் அதன் வடிவமானது தற்போதைய கட்டமைப்பில் இல்லாத ஹைட்ரசன் அணுக்களை உள்வாங்கும் தன்மையினைக் கொண்டுள்ளது. பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அதன் மூலக்கூறுகளில் உள்ள இரட்டைப்பிணைப்பின் வடிவியலைப் பொருத்து ஒருபக்க அல்லது மாறுபக்கத் தோற்றத்தினைக் கொண்டிருக்கும்.

உணவிலுள்ள கொழுப்பு வகைகள்
இவற்றையும் காண்க

இத்தகு மூலக்கூறுகளில் உள்ள மிகையான ஹைட்ரசன் அணுக்களின் பற்றாக்குறையினால் சேர்மங்களின் மூலக்கூற்றிடை அழுத்தங்களின் வலுவானது குறைந்து சேர்மங்களின் உருகுநிலையைக் குறிப்பிடத்தக்க அளவுத் தாழ்த்துகிறது. இப்பண்பை தாழ்ந்த வெப்பநிலைகளில் திரவமாகக் காணப்படும் பெரும்பாலான நிறைவுறா தாவர எண்ணெய்களை, அறைவெப்பநிலையில் திண்மமாக உள்ள நிறைவுற்ற கொழுப்புகளான பன்றிக் கொழுப்பு அல்லது வெண்ணெய் ஆகியவற்றுடன் ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம். பல தன்மைகளில் ஒருபக்க கொழுப்புகளைப் போலல்லாது, மாறுபக்க கொழுப்புகள் நிறைவுற்ற கொழுப்புகளைப்போல் காணப்படுகின்றன. உதாரணமாக, ஒருபக்க கொழுப்புகளைக் காட்டிலும் மாறுபக்க கொழுப்புகள் தாழ்வெப்பநிலையில் திண்மமாகின்றன.

பல்நிறைவுறா கொழுப்பான லினோலெயிக் அமிலத்தின் வேதிவடிவம்
ஒமேகா-6 கொழுப்பு அமிலமான லினோலெயிக் அமிலத்தின் முப்பரிமாண மாற்றீட்டின் வளைந்தத் தோற்றம்

உணவு மூலங்கள் தொகு

பல்நிறைவுறா கொழுப்பு பெரும்பாலும் கொட்டைகள், விதைகள், மீன்கள், பாசிகள், இலைவகைக் காய்கறிகள் மற்றும் துருவப் பகுதிகளில் மிக அதிகமாகக் காணப்படும் இறால் போன்ற கணுக்காலிகளின் கூனிப்பொடிகள் ஆகியவற்றில் உள்ளது. பதப்படுத்தும்போதும், சூடுபடுத்தும்போதும் பல்நிறைவுறா கொழுப்புகள் அழிக்கப்படும் சாத்தியம் உள்ளதால் முழு உணவு மூலங்களை உண்பதே எப்பொழுதும் சாலச்சிறந்ததாகும்.

உடல்நலம் தொகு

பயன்கள் தொகு

பாசிகள், மீன் எண்ணெய், மீன் மற்றும் கடல் உணவுகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மாரடைப்பிற்கான இடரினைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது[2]. அதேபோல், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் குசம்பப்பூ எண்ணெய்களில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இதயகுழலிய நோய்க்கான இடரினைக் குறைக்கலாமெனக் கண்டறியப்பட்டுள்ளது[3].

பல்வேறு உணவுகளில் கொழுப்பு பொதிவுகள் தொகு

உணவுநிறைவுற்ற கொழுப்புஒற்றைநிறைவுறா கொழுப்புபல்நிறைவுறா கொழுப்பு
மொத்தக் கொழுப்பில் எடை சதவிகிதம் (%)
சமையல் எண்ணெய்கள்
காட்டுக்கடுகு எண்ணெய்75929
சோள எண்ணெய்132459
ஆலிவ் எண்ணெய்13748
சூரியகாந்தி எண்ணெய்10.3[4]19.5[4]65.7[4]
சோயா அவரை எண்ணெய்152458
தேங்காய் எண்ணெய்9262
பால் பொருட்கள்
வழக்கமான பாலாடைக்கட்டி64293
இலகுவான பாலாடைக்கட்டி60300
முழுமையான பால்62284
பால், 2%62300
உயர்தர பனிகுழைமம் (ஐஸ்கிரீம்)62294
இலகுவான பனிகுழைமம் (ஐஸ்கிரீம்)62294
இறைச்சிகள்
மாட்டிறைச்சி33385
மாட்டின் இடுப்பு மேற்பகுதி இறைச்சி (அரைக்கப்பட்டது)38444
பன்றி இறைச்சி35448
பன்றித் தொடைக்கறி354916
கோழி மார்பு293421
கோழி342330
வான்கோழி மார்பு302030
வான்கோழி தொடைக்கறி322230
மீன்231546
சால்மான் மீன்283328
மாட்டிறைச்சி துரித உணவு (ஹாட் டாக்)42485
வான்கோழி துரித உணவு (ஹாட் டாக்)284022
பர்கர் (துரித உணவு)36446
பாற்கட்டிபர்கர் (துரித உணவு)43407
கோழி கறியுடன் இடையீட்டு ரொட்டி203932
தீயில்வாட்டப்பட்ட கோழி கறியுடன் இடையீட்டு ரொட்டி264220
போலந்து தொத்திறைச்சி374611
வான்கோழி தொத்திறைச்சி284022
தொத்திறைச்சி பீத்சா413220
பாற்கட்டி பீத்சா60285
கொட்டைகள்
வறுத்த வாதுமை (பாதாம் பருப்பு)96521
வறுத்த முந்திரி205917
வறுத்த மகடாமியா15792
வறுத்த வேர்க்கடலை (கச்சான்)145031
வறுத்த பேக்கான்86225
ஆளிவிதை (அரைக்கப்பட்டது)82365
எள்143844
சோயா அவரை142257
சூரியகாந்திவிதை111966
வறுத்த அக்ரூட் பருப்பு92363
இனிப்புகள் மற்றும் சுட்ட பொருள்கள்
சாக்லெட் மிட்டாய்59333
பழ சவச்சி மிட்டாய்144438
ஓற்சுமா (காடைக்கண்ணிக் கூழ்) உலர் திராட்சை பணியாரம்224727
சாக்லெட் பணியாரம்354218
மஞ்சள் நிற இனியப்பம் (கேக்கு)602510
டேனிய (டேனிஷ்) மாப்பசை503114
சமைக்கும்போதோ அல்லது சாப்பிடும்போதோ சேர்ப்பவை
வெண்ணெய் துண்டு63293
பாற்சாரமடித்த வெண்ணெய்62294
மார்கரின் (செயற்கை வெண்ணெய்), துண்டு183939
மார்கரின் (செயற்கை வெண்ணெய்), அதிக அளவு163349
மார்கரின் (செயற்கை வெண்ணெய்) , குறைந்த அளவு194633
பன்றிக் கொழுப்பு394511
காய்கறி நெய் (டால்டா)254526
கோழிக் கொழுப்பு304521
மாட்டுக் கொழுப்பு41433
பால்திரட்டி கலவை165425
இலகுவான இத்தாலியன் கலவை142458
மற்றவை
முட்டையின் மஞ்சள் கரு கொழுப்பு36[5]44[5]16[5]
குறிப்பிடப்படாத இடங்களில் மேற்கோள்: [6]

மேற்கோள்கள் தொகு

  1. Ordman, R. (2011). "Introduction to fats. Unpublished manuscript". Beloit, WI: Biochemistry Program, Beloit College. Archived from the original on 2011-09-30. பார்க்கப்பட்ட நாள் 2012-01-21.
  2. National Institute of Health (August 1, 2005). "Omega-3 fatty acids, fish oil, alpha-linolenic acid". Archived from the original on 3 மே 2006. பார்க்கப்பட்ட நாள் 26 March 2006.
  3. Willett, Walter C (September 2007). "The role of dietary n-6 fatty acids in the prevention of cardiovascular disease". Journal of Cardiovascular Medicine 8: S42–5. doi:10.2459/01.JCM.0000289275.72556.13. பப்மெட்:17876199. 
  4. 4.0 4.1 4.2 .nutritiondata.com --> Oil, vegetable, sunflower Retrieved on September 27, 2010
  5. 5.0 5.1 5.2 .nutritiondata.com --> Egg, yolk, raw, fresh Retrieved on August 24, 2009
  6. Feinberg School > Nutrition > Nutrition Fact Sheet: Lipids Northwestern University. Retrieved on August 24, 2009
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிவிவேகானந்தர்தமிழ்பதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திராவிடர்திருக்குறள்சிலப்பதிகாரம்பசுபதி பாண்டியன்அண்ணாமலை குப்புசாமிபாரதிதாசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்விவேகானந்தர் நினைவு மண்டபம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கம்பராமாயணம்தமிழ்நாடுநாலடியார்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வி. கே. பாண்டியன்நரேந்திர மோதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேவேந்திரகுல வேளாளர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐம்பெருங் காப்பியங்கள்அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுதிருவள்ளுவர்பத்துப்பாட்டுபீப்பாய்காமராசர்பிள்ளைத்தமிழ்முருகன்