பீப்பாய்

பீப்பாய் (Barrel) என்பது தொன்மையாக மரத்தினால் செய்யப்பட்ட உருளை வடிவிலான உட்புறம் காலியாக உள்ள ஒரு ஏனம் ஆகும். இது நீர், எண்ணெய், பியர், மது, போன்ற நீர்மங்களைத் தேக்கி வைக்க உதவும் ஒரு பொருள். பயன்பாட்டைப் பொறுத்து அளவை தரப்படுத்தப் பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, பியர் ஊற்றி வைக்கப் பயன்படுத்தப்படும் பீப்பாய்கள் 36 கேலன் அளவு இருக்கும்.

மரத்தால் ஆன பீப்பாய்கள் Cutchogue, USA
மியூனிக் செருமனியில் அக்டோபர்விழாவில் பயன்படுத்தப்படும் பியர் பீப்பாய்கள்
அண்மைய காலத்தின் இரும்பாலான பீப்பாய்கள்

கச்சா எண்ணெய் அல்லது பாறைநெய்யைச் சேர்த்து வைக்கவும் முன்னர் பீப்பாய்கள் பயன்படுத்தப் பட்டன. அதற்காகத் தரப்படுத்தப் பட்ட அளவு ஒரு பீப்பாய்க்கு 42 கேலன்கள். ஒரு கேலனுக்கு ஏறத்தாழ 3.785 லிட்டர் என்பதால் ஒரு பீப்பாய்க்கு ஏறத்தாழ 159 லிட்டர் அளவு இருக்கும்.

இரயில் பெட்டிகள் வழியாக எண்ணெய் அனுப்பப்பட்ட காலம் தொட்டுப் பீப்பாய்கள் உபயோகப் படுத்தப் படுவதில்லை என்றாலும், பாறைநெய் அளவையாக பீப்பாய் என்பது நிலைத்து விட்டது. இன்றும் பரவலாய் விலை நிர்ணயம், வரி மட்டும் சட்ட ஆவணங்கள் முதலியவற்றிலும் பீப்பாய் என்பது பாறைநெய்யை அளக்க ஒரு அளவையாக உபயோகப்படுத்தப் படுகிறது. காட்டாக, உலக சந்தைகளில் பாறைநெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு எவ்வளவு அமெரிக்க டாலர்கள் என்ற கணக்கில் வழங்கப்படும்.

மேற்கோள்கள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=பீப்பாய்&oldid=3693266" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுசிறப்பு:Searchமுதற் பக்கம்ரஃபாபசுபதி பாண்டியன்தமிழ்சுப்பிரமணிய பாரதிதிருக்குறள்பதினெண் கீழ்க்கணக்குதேவேந்திரகுல வேளாளர்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சிரேயாஸ் ஐயர்அண்ணாமலை குப்புசாமிபாரதிதாசன்எட்டுத்தொகைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிலப்பதிகாரம்அறுபடைவீடுகள்வி. கே. பாண்டியன்விநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திருவள்ளுவர்கம்பராமாயணம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesநேரம்விநாயக் தாமோதர் சாவர்க்கர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ்நாடுசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்நாலடியார்பிள்ளைத்தமிழ்கம்பர்ஈ. வெ. இராமசாமி