ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு

ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (Asia-Pacific Economic Cooperation, APEC) என்பது பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். பசிபிக் வட்டார நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை ஆராயும். இந்நாடுகள் கூட்டாக உலகின் மொத்தப் பொருளாதாரத்தில் 60% விழுக்காட்டினைத் தன்னகத்தே கொண்டுள்ளன.[1]. இவ்வமைப்பின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்திருக்கிறது.

ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு
உறுப்பு நாடுகள் பச்சையில் உள்ளன
உறுப்பு நாடுகள் பச்சையில் உள்ளன
தலைமையகம் சிங்கப்பூர்
வகைபொருளாதார மன்றம்
உறுப்பு நாடுகள்
தலைவர்கள்
• APEC ஹோஸ்ட் பொருளாதாரம் 2023
ஜோ பைடன்
• நிறைவேற்றுப் பணிப்பாளர்
ரெபேக்கா பாத்திமா சாண்டா மரியா
உருவாக்கம்1989
2005 ஏபெக் உச்சி மாநாடு, புசான், தென் கொரியா
2006 ஏபெக் உச்சி மாநாடு, ஹனோய், வியட்நாம்
2007 ஏபெக் உச்சி மாநாடு, சிட்னி, ஆஸ்திரேலியா

ஏபெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சீன தாய்பெய் தவிர மற்றைய நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். சீன தாய்பெய் அமைச்சர் மட்டத்தில் இம்மாநாட்டில் பங்கு பற்றுகிறது. உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஏபெக் நாடொன்றில் இடம்பெறும். அரசுத் தலைவர்கள் உச்சிமாநாடு இடம்பெறும் நாட்டின் தேசிய உடையில் இம்மாநாட்டில் கலந்து கொள்வது ஒரு சிறப்பம்சமாகும். 2007ம் ஆண்டிற்கான ஏபெக் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் செப்டம்பர் 2-9 இல் நடைபெற்றது.

வரலாறு தொகு

ஜனவரி 1989 இல் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த பொப் ஹோக் பசிபிக் நாடுகளின் கூடிய பொருளாதாரக் கூட்டுக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் நவம்பரில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் காரெத் எவான்ஸ் தலைமையில் 12 நாடுகளின் அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நடைபெற்றது.

முதலாவது உச்சி மாநாடு 1993 இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தலைமையில் வாஷிங்டனில் உள்ள பிளேக் தீவில் இடம்பெற்றது. ஏபெக் தலைமையகம் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டது.

அங்கத்துவ நாடுகள் தொகு

தற்போது மொத்தம் 21 நாடுகள் இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

சேர்ந்த ஆண்டு
 ஆஸ்திரேலியா1989
 புரூணை1989
 கனடா1989
 இந்தோனேசியா1989
 ஜப்பான்1989
 மலேசியா1989
 பிலிப்பைன்ஸ்1989
 நியூசிலாந்து1989
 சிங்கப்பூர்1989
 தென் கொரியாவட கொரியா1989
 தாய்லாந்து1989
 ஐக்கிய அமெரிக்க நாடுகள்1989
 சீனக் குடியரசு[2]1991
 ஹாங்காங்[3]1991
 சீனா1991
 மெக்சிகோ1993
 பப்புவா நியூ கினி1993
 சிலி1994
 பெரு1998
 ரஷ்யா1998
 வியட்நாம்1998

 இந்தியா இக்கூட்டமைப்பில் அங்கத்துவத்துக்கு விண்ணப்பித்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனவாயினும், 2010 இற்குப் பின்னரேயே இக்கோரிக்கை பரிசீலனைக்கெடுக்கப்படும்.[4][5][6][7]

அதனை விட, மொங்கோலியா, லாவோஸ், கொலம்பியா[8],  ஈக்குடோர்[9] போன்றவையும் விண்ணப்பித்துள்ளன.

சந்திப்பு இடம்பெற்ற இடங்கள் தொகு

வருடம்#திகதிகள்நாடுநகரம்இணையத்தளம்
19891 வதுநவம்பர் 6–7 ஆஸ்திரேலியாகான்பரா
19902 வதுஜூலை 29–31 சிங்கப்பூர்சிங்கப்பூர்
19913 வதுநவம்பர் 12–14 தென்கொரியாசியோல்
19924 வதுசெப்டெம்பர் 10–11 தாய்லாந்துபேங்காக்
19935 வதுநவம்பர் 19–20 ஐக்கிய அமெரிக்காசியாட்டில்
19946 வதுநவம்பர் 15–16 இந்தோனேசியாபோகோர்
19957 வதுநவம்பர் 18–19 ஜப்பான்ஒசாக்கா
19968 வதுநவம்பர் 24–25 பிலிப்பீன்சுமணிலா மற்றும் சுபிக்
19979 வதுநவம்பர் 24–25 கனடாவான்கூவர்
199810 ஆம் தேதிநவம்பர் 17–18 மலேசியாகோலாலம்பூர்
199911 ஆம் தேதிசெப்டெம்பர் 12–13 நியூசிலாந்துஓக்லாந்து
200012 ஆம் தேதிநவம்பர் 15–16 புருணைபண்டார் செரி பெகவான்[2] பரணிடப்பட்டது 2003-03-14 at the Library of Congress Web Archives
200113 ஆம் தேதிஅக்டோபர் 20–21 சீனாசாங்காய்
200214 ஆம் தேதிஅக்டோபர் 26–27 மெக்சிக்கோலாஸ் கபோஸ்
200315 ஆம் தேதிஅக்டோபர் 20–21 தாய்லாந்துபேங்காக்
200416 ஆம் தேதிநவம்பர் 20–21 சிலிசாண்டியாகோ[3]
200517 ஆம் தேதிநவம்பர் 18–19 தென்கொரியாபுசான்
200618 ஆம் தேதிநவம்பர் 18–19 வியட்நாம்ஹனோய்[4] பரணிடப்பட்டது 2006-02-25 at the வந்தவழி இயந்திரம்
200719 ஆம் தேதிசெப்டெம்பர் 8–9 ஆஸ்திரேலியாசிட்னி[5] பரணிடப்பட்டது 2010-11-19 at the வந்தவழி இயந்திரம்
200820 ஆம் தேதிநவம்பர் 22–23 பெருலிமா[6] பரணிடப்பட்டது 2007-10-13 at the வந்தவழி இயந்திரம்
200921 ஆம் தேதிநவம்பர் 14–15 சிங்கப்பூர்சிங்கப்பூர்[7]
201022 ஆம் தேதிநவம்பர் 13–14 ஜப்பான்யோகோஹாமா[8]
201123 ஆம் தேதிநவம்பர் 12–13 ஐக்கிய அமெரிக்காஹொனோலுலு[9] பரணிடப்பட்டது 2011-03-26 at the வந்தவழி இயந்திரம்
201224 ஆம் தேதிசெப்டெம்பர் 9–10 ரஷ்யாவிளாதிவசுத்தோக்[10] பரணிடப்பட்டது 2021-06-26 at the வந்தவழி இயந்திரம்
201325 ஆம் தேதிஅக்டோபர் 5–7 இந்தோனேசியாபாலி[11]
201426 ஆம் தேதிநவம்பர் 10–11 சீனாபெய்ஜிங்
201527 ஆம் தேதிநவம்பர் 18–19 பிலிப்பீன்சுபாசாய்
201628 ஆம் தேதிநவம்பர் 19–20 பெருலிமா
201729 ஆம் தேதிநவம்பர் 10–11 வியட்நாம்தா நாங்
201830 ஆம் தேதிநவம்பர் 17–18  பப்புவா நியூ கினிமார்சுபி துறைமுகம்
201931 ஆம் தேதி (ஆரம்பத்தில்)நவம்பர் 16–17 (ரத்து செய்யப்பட்டது)  சிலிசாண்டியாகோ
202031 ஆம் தேதி (தாமதமாகிறது)நவம்பர் 20  மலேசியாகோலாலம்பூர் (ஆன்லைனில் ஹோஸ்ட் செய்யப்பட்டது)
202132 ஆம் தேதிஜூலை 16 மற்றும் நவம்பர் 12  நியூசிலாந்துஓக்லாந்து (ஆன்லைனில் ஹோஸ்ட் செய்யப்பட்டது)
202233 ஆம் தேதிநவம்பர் 18–19  தாய்லாந்துபேங்காக்
202334 ஆம் தேதிநவம்பர் 15–17  ஐக்கிய அமெரிக்காசான் பிரான்சிஸ்கோ

மேற்கோள்கள் தொகு

  1. (உலக வங்கி)
  2. சீனக் குடியரசு (ROC) தனது பெயரை இக்கூட்டமைப்பில் "சீனக் குடியரசு" என்றோ அல்லது "தாய்வான்" என்றோ அழைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. பதிலாக "சீன தாய்பெய்" என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் அரசுத் தலைவர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை, அமைச்சர்கள் மட்டத்திலேயே தனது தூதுக் குழுவை அனுப்புகிறது.
  3. ஹாங்காங் பிரித்தானிய காலனித்துவ நாடாக இருந்தபோது 1991இல் ஏபெக்கில் இணைந்தது. 1997 இல் சீன மக்கள் குடியரசுடன் இணைக்கப்பட்டதில் இருந்து இது "ஹாங்காங், சீனா" என்று வழங்கப்பட்டு வருகிறது.
  4. APEC 'too busy' for free trade deal, says Canberra
  5. இந்திய அங்கத்துவம் பற்றிய பிரச்சினை
  6. "Extend a hand to an absent friend". Archived from the original on 2007-12-23. பார்க்கப்பட்ட நாள் 2007-09-09.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-11-14. பார்க்கப்பட்ட நாள் 2007-11-14.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-14. பார்க்கப்பட்ட நாள் 2007-09-09.
  9. [1]

வெளி இணைப்புகள் தொகு

🔥 Top keywords: தமிழ்அண்ணாமலை குப்புசாமிதிவ்யா துரைசாமிபஞ்சாப் கிங்ஸ்முதற் பக்கம்சிறப்பு:Searchவிளம்பரம்அயோத்தி தாசர்கார்ல் மார்க்சுபத்து தலஅரண்மனை (திரைப்படம்)வானிலைஉன்னை நினைத்துதிருவண்ணாமலைலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்சிறப்பு:RecentChangesதரம்சாலாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)முருகன்ஆடைசுப்பிரமணிய பாரதிதிருக்குறள்எட்டுத்தொகைதினத்தந்திவிபுலாநந்தர்சிலப்பதிகாரம்அட்சய திருதியைபதினெண் கீழ்க்கணக்குதினகரன் (இந்தியா)சிந்துவெளி நாகரிகம்உன்னை தேடிஅறுபடைவீடுகள்இந்தியன் பிரீமியர் லீக்கிராம்புஇராமலிங்க அடிகள்திருநாவுக்கரசு நாயனார்இராகவேந்திர சுவாமிகள்விஜய் (நடிகர்)தேவாரம்