மெட்டா சைலீன்

நறுமண நீரகக்கரிமச் சேர்மம். டைமெத்தில்பென்சீனின் மூன்று மாற்றியங்களில் ஒன்று.

மெட்டா சைலீன் (m-Xylene) என்பது C6H4(CH3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். m-சைலீன் என்றும் இதை அழைக்கலாம். அரோமாட்டிக் ஐதரோகார்பன் என்று வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் பென்சீனுடன் இரண்டு மெத்தில் தொகுதிகளைக் கொண்டுள்ள o-சைலீன் மற்றும் p-சைலீன் ஆகிய இரண்டு மாற்றியங்களைக் கொண்டுள்ளது. மெட்டா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் "இடையில்" என்பதாகும். இரண்டு மெத்தில் தொகுதிகளும் பென்சீன் வளையத்தில் 1 மற்றும் 3-ஆம் இடங்களில் ஒன்றுவிட்டு ஒன்றாக இடையில் பதிலீடு செய்யப்பட்டுள்ளதால் இது மெட்டா சைலீன் என்று வழங்கப்படுகிறது. மெட்டா சைலீன் உள்ளிட்ட அனைத்து சைலீன்களும் நிறமற்றவையாகவும் எளிதில் தீப்பிடிக்கும் பண்பையும் கொண்டுள்ளன.[5]

மெட்டா சைலீன்
m-சைலீன்
Skeletal formula
Skeletal formula
வன்கூட்டு வாய்ப்பாடு
Space-filling model
Space-filling model
வெளிநிரப்பு மாதிரி
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3-சைலீன்
முறையான ஐயூபிஏசி பெயர்
1,3-டைமெத்தில்பென்சீன் (1,3-இருமெத்தில்பென்சீன்)
வேறு பெயர்கள்
m-சைலீன், மெட்டா சைலால்
இனங்காட்டிகள்
108-38-3 Y
ChEBICHEBI:28488 N
ChEMBLChEMBL286727 N
ChemSpider7641 Y
InChI
  • InChI=1S/C8H10/c1-7-4-3-5-8(2)6-7/h3-6H,1-2H3 Y
    Key: IVSZLXZYQVIEFR-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள்Image
Image
KEGGC07208 N
பப்கெம்7929
வே.ந.வி.ப எண்ZE2275000
  • Cc1cccc(c1)C
  • CC1=CC(=CC=C1)C
UNIIO9XS864HTE N
பண்புகள்
C8H10
வாய்ப்பாட்டு எடை106.16 கி/மோல்
தோற்றம்நிறமற்ற நீர்மம்
அடர்த்தி0.86 கி/மி.லி
உருகுநிலை −48 °C (−54 °F; 225 K)
கொதிநிலை 139 °C (282 °F; 412 K)
கரையாது
எத்தனால்-இல் கரைதிறன்கலக்கக்கூடியது
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன்கலக்கக்கூடியது
ஆவியமுக்கம்9 மிமீபாதரசம் (20°செல்சியசு)[1]
-76.56·10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.49722
பிசுக்குமை0.8059 cP 0 °செ
0.6200 cP 20 ° செல்சியசு
இருமுனைத் திருப்புமை (Dipole moment)0.33-0.37 D[2]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள்விழுங்கினால் தீங்கு விளைவிக்கக்கூடியது. ஆவி நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கக்கூடும். நீர்மமும் ஆவியும் எரியக்கூடியன.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்External MSDS
R-சொற்றொடர்கள்R10 R20 R21 R38
S-சொற்றொடர்கள்S25
தீப்பற்றும் வெப்பநிலை 27 °C (81 °F; 300 K) [3]
Autoignition
temperature
527 °C (981 °F; 800 K)[3]
வெடிபொருள் வரம்புகள்1.1%-7.0%[1]
Threshold Limit Value
மில்லியனுக்கு 100 பகுதிகள்[3] (TWA), மில்லியனுக்கு 150 பகுதிகள்[3] (STEL)
Lethal dose or concentration (LD, LC):
மில்லியனுக்கு 2010 பகுதிகள் (சுண்டெலி, 24 மணி)
மில்லியனுக்கு 8000 பகுதிகள் (எலி, 4 மணி)[4]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA மில்லியனுக்கு 100 பகுதிகள் (435 மி.கி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA மில்லியனுக்கு 100 பகுதிகள் (435 மி.கி/மீ3) மில்லியனுக்கு 150 பகுதிகள் (655 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
900 ppm[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு தொகு

பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி தார் ஆகியவற்றில் இயற்கையாகவே சைலீன்கள் உள்ளன.[6] பெட்ரோலியப் பொருட்களில் பொதுவாக சைலீன்கள் எடையளவில் ஒரு விழுக்காடு (1%) உள்ளன.[7] சைலீன்களின் கலவையை பகுதியாக சல்போனேற்றம் செய்து பின்னர் சல்போனேற்றம் அடையாத எண்ணெய்களை நீக்கிவிட்டு தொடர்ந்து சல்போனேற்றம் அடைந்த விளைபொருளை கொதிநீராவிமுறைக் காய்ச்சி வடிப்பு மூலம் மெட்டா சைலீனாக பிரித்தெடுக்கலாம்.

பயன்பாடு தொகு

மெட்டா சைலீனின் முதன்மையான வேதியியல் பயன்பாடு ஐசோப்தாலிக் காடி உற்பத்தியாகும். குளிர்பான புட்டிகள் தயாரிக்கப் பயன்படும் பாலியெத்திலின் டெரிப்தாலேட்டின் பண்புகளை மாற்றியமைக்க இணைபலபடியாக்கல் ஒருமமாக மெட்டா சைலீன் பயன்படுத்தப்படுகிறது. m-சைலீனில் உள்ள இரண்டு மெத்தில் தொகுதிகளும் ஆக்சிசனேற்றம் அடைந்து கார்பாக்சில் தொகுதியாக மாற்றப்படும் செயல்முறை ஐசோப்தாலிக் காடி தயாரித்தலில் இடம்பெறுகிறது. 2,4- மற்றும் 2,6-சைலிடின் தயாரிப்பிலும், சிறிய அளவிலான வேதிப்பொருட்கள் தயாரிப்பதிலும் ஒரு மூலப்பொருளாகவும் மெட்டா சைலீனின் பயன்படுத்தப்படுகிறது.[8][5]

நச்சுத்தன்மை தொகு

இவ்வகை சைலீன்கள் கடுமையான நச்சுத்தன்மை கொண்டவை இல்லை. எலிகளுக்கு வாய்வழியாகக் கொடுக்கப்படும் போது இதன் உயிர்கொல்லும் அளவு 4300 மி.கி/ கி.கி ஆகும். நச்சுத்தன்மையை விட இவற்றின் உணர்விழக்கச்செய்யும் விளைவுகளே ஓர்மையுடன் கருதப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0669". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. DeanHandb, Lange´s Handbook of chemistry, 15th edition,1999.
  3. 3.0 3.1 3.2 3.3 "m-Xylene". International Chemical Safety Cards. IPCS/NIOSH. July 1, 2014.
  4. "Xylene (o-, m-, p-isomers)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  5. 5.0 5.1 Fabri, Jörg; Graeser, Ulrich; Simo, Thomas A. (2005), "Xylenes", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a28_433
  6. Talhout, Reinskje; Schulz, Thomas; Florek, Ewa; Van Benthem, Jan; Wester, Piet; Opperhuizen, Antoon (2011). "Hazardous Compounds in Tobacco Smoke". International Journal of Environmental Research and Public Health 8 (12): 613–628. doi:10.3390/ijerph8020613. பன்னாட்டுத் தர தொடர் எண்:1660-4601. பப்மெட்:21556207. 
  7. EPA-454/R-93-048Locating and estimating air emissions from sources of xyleneEmission Inventory Branch Technical Support Division Office of Air Quality Planning and Standards U.S. Environmental Protection Agency March 1994
  8. Ashford's Dictionary of Industrial Chemicals, third edition, page 9692.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மெட்டா_சைலீன்&oldid=3676723" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: யானையின் தமிழ்ப்பெயர்கள்சிறப்பு:Searchமுதற் பக்கம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ம. கோ. இராமச்சந்திரன்தமிழ்சுப்பிரமணிய பாரதிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பிரம்மாஅண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மோகன் (நடிகர்)திருக்குறள்விவேகானந்தர்திவ்யா துரைசாமிஎட்டுத்தொகைதிருவள்ளுவர் சிலைபாரதிதாசன்உலகப் பெற்றோர் நாள்சிலப்பதிகாரம்இளையராஜாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பெண் தமிழ்ப் பெயர்கள்சிறப்பு:RecentChangesதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இல்லுமினாட்டிதஞ்சைப் பெருவுடையார் கோயில்பசுபதி பாண்டியன்கம்பராமாயணம்பத்துப்பாட்டுதமிழ்நாடுஅறுபடைவீடுகள்நாலடியார்ஐம்பெருங் காப்பியங்கள்பீப்பாய்திராவிடர்பிள்ளைத்தமிழ்விநாயகர் அகவல்