மின்சிட்டுகள்

மின்சிட்டுகள் சற்றே சிறிய பறவைகள். இவ்வகைப் பறவைகள் நீண்ட உடலையும் குட்டையான கால்களையும் உடையவை. மின் சிட்டுகள், முற்றிலும் மரங்களுக்குள்ளாகவே தங்களது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளும் வகையைச் சேர்ந்தவைகள். இரையைப் பிடிப்பதென்றாலும், பறந்து பறந்து தான் பிடிக்கும். வெகு அரிதாகவே தரைக்கு வரும். மேலும், மிக உயர்ந்த இடங்களிலேயே கூடுகட்டும். மின்சிட்டுகள் வலசை போகாது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளாகவே சுற்றிக்கொண்டிருக்கும். மரங்கள் அடர்ந்த காடுகளில் அதிகளவில் காணப்படும். பூச்சிகளை பிரதான உணவாகக் கொள்ளும்.[1]

ஆரஞ்சு மின்சிட்டு

தொகு
ஆரஞ்சு மின்சிட்டு

ஆரஞ்சு மின்சிட்டு நீண்ட நாட்களாக ஸ்கார;லெட் மின்சிட்டின் இனத்தைச் சேர்ந்ததொரு பறவையாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு, தென்கிழக்கு இந்தியா-இலங்கைப் பகுதியைச் சேர்ந்த இவ்வகைப் பறவைகள் ஸ்கார்லெட்டிலிருந்து சற்று மாறுபட்டிருப்பதைக் கண்டு, தனிச் சிற்றினமாக பட்டியலிடப்பட்டுள்ளது. மற்ற மின்சிட்டுகளைக் காட்டிலும் சற்று பெரிய பறவை இது. நிறக் கலவையில், ஆண் பெண் இரண்டும் உச்சந்தலையின் சாம்பல் நிறமும், ஆண் இறக்கையில் சிகப்பு புள்ளிகளையும் கொண்டிருக்கும். கொஞ்சம் நீண்ட வால்களை உடையது.

சிறிய மின்சிட்டு

தொகு

எல்லா மின்சிட்டுகளையும் விட அளவில் சிறியவை. ஆண், மற்ற மின்சிட்டுகள் போல அடர்கருப்பு நிற கழுத்து மற்றும் முதுகுப்பகுதியைக் கொண்டிருக்காது. மாறாக அடர்சாம்பல் நிறத்திலிருக்கும். வயிற்றுப்பகுதி வெளிறிய ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். பெண், வயிற்றுப் பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆரஞ்சு மின்சிட்டுகள் போலவே இதற்கும் நீண்ட வால் உண்டு.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. சரவண கணேஷ் & கொழந்த. கா2 : கா ஸ்கொயர்.
  2. ஆதி வள்ளியப்பன். நாராய் நாராய். அறிவியல் வெளியீடு.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மின்சிட்டுகள்&oldid=3947144" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்