பிராகுயி மொழி

பிராகுயி மொழி அல்லது பராஹவி மொழி (பிராகுயி மொழி: براہوئی‎) அல்லது பிராவி மொழி (براوِ) பிராகுயி இனத்தவரால் பேசப்படுகிறது. இது சிறிய அளவில் ஆப்கானித்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது ஆயினும், பாக்கித்தான், பலூசிசுதான் மாகாணத்திலேயே பெருமளவில் புழங்கி வருகிறது. 2005 ஆம் ஆண்டில் எத்னோலாக் பதிப்பில் 22 இலட்சம் எனக் கணிக்கப்பட்டுள்ள இதன் பேசுவோர் தொகையில் 90 வீதமானோர் பாக்கித்தானிலேயே உள்ளனர். சிந்து, பலூசிஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முப்பதுக்கு மேற்பட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்.

பிராகுயி
براہوئی
பிராகுயி என்ற வார்த்தை நஸ்தலீகு எழுத்தில் எழுதப்பட்டுள்ளது
உச்சரிப்புவார்ப்புரு:IPA-to
நாடு(கள்)பாக்கித்தான், ஆப்கானித்தான்[1]
பிராந்தியம்பலுச்சிசுத்தானம்
இனம்பிராகுயி மற்றும் பலுச்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (2.8 மில்லியன் காட்டடப்பட்டது: 1980–2017 மக்கள் தொகை கணக்கெடுப்பு)e26
திராவிடம்
பார்சி-அரேபிய எழுத்துகள் (நஸ்தலீகு),
இலத்தீன் எழுத்துகள்
அலுவலக நிலை
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
Regulated byபிராகுயி துறை, பலூசிஸ்தான் பல்கலைக்கழகம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3brh
மொழிக் குறிப்புbrah1256[2]
{{{mapalt}}}
பிராகுயி (இடதுபுறம் மேல்) மற்ற அனைத்து திராவிட மொழிகளிலிருந்தும் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.[3]
{{{mapalt2}}}
பிராகுயி பாதிக்கப்படக்கூடியது என யுனெஸ்கோ ஆபத்தில் உள்ள உலக மொழிகளின் அட்லஸில் வகைப்படுத்தப்பட்டுள்ளது

திராவிட மொழி

தொகு

இது திராவிட மொழிக் குடும்பத்தில் வட திராவிடப் பிரிவைச் சேர்ந்த ஒரு மொழியாகும். எனினும், பலூச்சி போன்ற ஈரானிய மொழிகளால் பெரிதும் தாக்கம் அடைந்துள்ளது.

கிளை மொழிகள்

தொகு

பிராகுவியில் முக்கியமான மூன்று கிளைமொழிகள் உள்ளன. இவை சரவான், ஜலாவன், சாகி என்பவையாகும். இவற்றுள் சரவான், மஸ்துங், காலத், போலான், குவெத்தா ஆகிய இடங்களிலும், ஜலாவன், குஸ்டார், ஸாரி, வாத், முலா, ஜாஹு ஆகிய பகுதிகளிலும், சாகி, காரான், பேஸ்மா என்னும் இடங்களிலும் பேசப்படுகின்றன.

சிந்துவெளி மொழி

தொகு

பொதுவாக பராஹவி, ஒரு காலத்தில் வட இந்தியப் பகுதிகளில் பெரிய அளவில் பரந்து இருந்து ஆரியக் குடியேற்றம் காரணமாக ஒதுக்கப்பட்டது எனக் கருதப்படும் ஒரு மொழியின் எச்சமாகக் கருதப்படுகிறது. மடிந்து போன சிந்துவெளி நாகரிகத்தின் நேர் வழித்தோன்றலாகவும் பராஹவி இருந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகின்றது. ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பிராகுயி இன மக்கள், 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டில் பலூசிஸ்தானுக்கு புலம் பெயர்ந்தவர்களாவர்.

இலக்கியம்

தொகு

பிராகுவி இலக்கியம் மிகவும் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. முதலாம் நாசர் கான் (1750 - 1793) என்பவரின் ஆட்சிக் காலத்தில் மாலிக் தார்ட் என்பவரால் எழுதப்பட்ட துஹ்ஃபா-துல்-அஜைப் என்பதே இம்மொழியில் காணப்படும் மிகப் பழைய இலக்கியமாகும். இது 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

எழுத்து[4]

தொகு
bápísyşvxezźģfúmnlgctŧrŕdoðhjkaiuńļ

எண்

தொகு
Number (Tamil)Number (Brahui)
ondruasi
irandairaa
rmu:ndrumusi

[5]

உசாத்துணைகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்;e26 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Brahui". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. Parkin 1989, ப. 37.
  4. https://sites.google.com/site/brahuilb/home
  5. Numbers in Million-Speaker Languages


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=பிராகுயி_மொழி&oldid=3951005" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்