நெடுங்குழு 6 தனிமங்கள்

நெடுங்குழு 6 (Group 6) இல் உள்ள ஆறில் உள்ள தனிமங்கள் குரோமியம் தொகுதி தனிமங்களாகும். இந்தக் குழுவில் குரோமியம், மாலிப்டினம்,தங்குதன், சீபோர்கியம் ஆகிய நான்கு தனிமங்களும் இருக்கின்றன. இவற்றின் இடத்தை பின்வரும் தனிம வரிசை அட்டவனையில் காணலாம்.

H He
LiBe BCNOFNe
NaMg AlSiPSClAr
KCaScTiVCrMnFeCoNiCuZnGaGeAsSeBrKr
RbSrYZrNbMoTcRuRhPdAgCdInSnSbTeIXe
CsBa*HfTaWReOsIrPtAuHgTlPbBiPoAtRn
FrRa**RfDbSgBhHsMtDsRgCnUutUuqUupUuhUusUuo
 
 *LaCePrNdPmSmEuGdTbDyHoErTmYbLu
 **AcThPaUNpPuAmCmBkCfEsFmMdNoLr
தனிம அட்டவணையில் நெடுங்குழு 6 தனிமங்கள்

இயற்பியல் பண்புகள் தொகு

இக்குழுவில் உள்ள அனைத்தும் உலோகப் பண்புகளை பெற்றுள்ளன. சிறிய அணுப் பருமனையும் அதிக கடினத் தன்மையையும் இக்குழுவில் உள்ள தனிமங்கள் பெற்றுள்ளன. பொதுவாக இவை அரிமானத்திற்கு ஆட்படுவதில்லை. குறைந்த அளவில் ஆவியாகின்றன. வெள்ளியைப் போல வெண்மை நிறம் கொண்டவையாக உள்ளன. அட்டவணையில் மேலிருந்து கீழாகச் செல்லும் குரோமியம், மாலிப்டினம், தங்குதன் என்ற வரிசையில் இவற்றின் உருகுநிலை, கொதிநிலை, அடர்த்தி ஆகிய பண்புகள் உயருகின்றன. தங்குதன் லாந்தனைடுகளைப் பின் தொடர்வதால் அணு ஆரம் குரோமியத்தில் இருந்து அதிகரித்து மாலிப்டினம் மற்றும் தங்குதனின் அணு ஆரங்கள் சம அளவில் காணப்படுகின்றன. எனவே இவ்விரு தனிமங்களின் பண்புகளில் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகிறது. ஒரே வகையான பண்புகளை இவை இரண்டும் பெற்றுள்ளன. இவை இரண்டும் தாதுக்களுடன் சேர்ந்தே காணப்படுகின்றன. இதன் கலவைகளில் இருந்து இவற்றை தனித்தனியே பிரிப்பதும் கடினமாகும்.

வேதிப்பண்புகள் தொகு

முதல் மூன்று தனிமங்களும் தங்களது டி ஆர்பிட்டால்களில் 10 எலக்ட்ரான்களுக்குப் பதிலாக குறைவான எலக்ட்ரான்களைக் கொண்டிருப்பதால் இவை இடைநிலைத் தனிமங்கள் எனப்படுகின்றன. குரோமியம் (Cr), மாலிப்டினம் (Mo), தங்குதன் (W) ஆகிய மூன்று உலோகங்களும் எதற்கும் வளைந்து கொடுக்காத கடின உலோகங்களாகும். எட்டாவது தொடரில் இடம்பெற்றுள்ள ஆறாவது குழுவில் அடுத்ததாக அன்பெத்தெக்சியம் அல்லது அன்பெண்டோக்டியம் இடம்பெறுவதற்கு சாத்தியம் உள்ளது. படிப்படியாக இத்தனிமங்களின் நிலைத்தன்மை தனிமவரிசை அட்டவனையில் அன்பையெக்சியம் வரைக்கும் குறைகிறது. அன்பெத்தெக்சியம் அல்லது அன்பெண்டோக்டியம் தனிமங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆனால் விரைவில் இவை கண்டறியப்படலாம்.

அணு எண்தனிமம்ஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்
22குரோமியம்2, 8, 13, 1
40மாலிப்டினம்2, 8, 18, 13, 1
72தங்குதன்2, 8, 18, 32, 12, 2
104சீபோர்கியம்2, 8, 18, 32, 32, 12, 2

இந்த குழுவின் முதல் மூன்று உறுப்பினர்களுக்கான வேதியியல் பெரும்பான்மை மட்டுமே ஒப்புமை நோக்கில் காணப்படுகின்றன. சீபோர்கியம் தனிமத்தின் பண்புகள் முழுமையாக வரையறுக்கப்படவில்லை. இத்தொகுதியில் உள்ள தனிமங்கள் அதிக உருகுநிலையைக் கொண்டுள்ளன. இவை உயர் ஆக்சிசனேற்ற நிலைகளில் ஆவியாகும் சேர்மங்களை உருவாக்குகின்றன. இவற்றின் உருகு நிலைகள் முறையே 1907° செல்சியசு, 2477° செல்சியசு மற்றும் 3422° செல்சியசு என்பனவாகும். இவற்றில் தங்குதன் மற்றவற்றைக் காட்டிலும் அதிக உருகுநிலையைக் கொண்டுள்ளது.

சாதாரண வெப்பநிலையில் ஆறாவது தொகுதி தனிமங்கள் அனைத்தும் வினைத்திறன் குறைந்தவையாக உள்ளன. நீர்த்த அமிலங்களில் கரைந்து இவை அயனிகளைக் கொடுக்கின்றன. நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலம், நீர்த்த கந்தக அமிலம் ஆகியனவற்றில் குரோமியம் கரைந்து cr2+ அயனியைக் கொடுக்கிறது. ஆனால் மாலிப்டினமும் தங்குதனும் இவ்வமிலங்களில் கரைவதில்லை. குரோமியம் காரங்களில் கரைந்து குரோமேட்டுகளைக் கொடுக்கிறது. மேலும் இத்தொகுதி தனிமங்கள் யாவும் ஆக்சிசன், நைட்ரசன், ஆலசன்கள் ஆகியவற்றுடன் வெப்பப்படுத்தும் போது வினைபுரிந்து சேர்மங்களைக் கொடுக்கின்றன. எலக்ட்ரான் அமைப்பின்படி குரோமியம் மற்றும் மாலிப்டினம் தனிமங்கள் 1 முதல் 6 வரை ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவை 0 முதல் 6 வரை ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டிருக்கின்றன. தங்குதன் மட்டும் 2 முதல் 6 வரை ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டிருக்கிறது[1]. குரோமியத்தின் நிலையான ஆக்சிசனேற்ற நிலை +3 ஆகும். மாலிப்டினம் மற்றும் தங்குதன் இவற்றின் நிலையான ஆக்சிசனேற்ற நிலை +6 ஆகும். இத்தொகுதியில் அணு எண் அதிகரிக்கும் போது உயர் ஆக்சிசனேற்ற நிலை அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாக உள்ளது.

கண்டுபிடிப்பு தொகு

1761 ஆம் ஆண்டு சூலை 26 இல் குரோமியம் முதன் முதலில் கண்டறிந்து கூறப்பட்டது. யோகான் கோட்லாப் லெக்மான் உருசியாவில் இதைக் சிவப்பு ஆரஞ்சு நிறத்தில் இதைக் கண்டறிந்தார். சைபீரியன் சிவப்பு ஈயம் என்று அதற்கு பெயரிடப்பட்டது. 10 ஆண்டுகளுக்குள் அடர் மஞ்சள் நிற நிறமியாக இருக்குமென கருதப்பட்டது [2]. ஈயச் சேர்மமாக தவறுதலாக அடையாளம் காணப்பட்டதால் PbCrO4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு எழுதப்பட்டது. லூயிசு நிக்கோலசு வாக்கியூலின் இக்கனிமத்திலிருந்து குரோமியம் டிரையாக்சைடை உற்பத்தி செய்தார். மேலும் இவர் மாணிக்கம், மரகதம் போன்ற கற்களிலும் குரோமியம் இருப்பதைக் கண்டறிந்தார்[3] He was also able to detect traces of chromium in precious gemstones, such as ruby or emerald.[2][4].


மேற்கோள்கள் தொகு

  1. Schmidt, Max (1968). "VI. Nebengruppe". Anorganische Chemie II (in German). Wissenschaftsverlag. pp. 119–127.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 Guertin, Jacques; Jacobs, James Alan; Avakian, Cynthia P. (2005). Chromium (VI) Handbook. CRC Press. pp. 7–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56670-608-7.
  3. Vauquelin, Louis Nicolas (1798). "Memoir on a New Metallic Acid which exists in the Red Lead of Sibiria". Journal of Natural Philosophy, Chemistry, and the Art 3: 146. https://books.google.com/?id=6dgPAAAAQAAJ. 
  4. van der Krogt, Peter. "Chromium". பார்க்கப்பட்ட நாள் 2008-08-24.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிவிவேகானந்தர்தமிழ்பதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திராவிடர்திருக்குறள்சிலப்பதிகாரம்பசுபதி பாண்டியன்அண்ணாமலை குப்புசாமிபாரதிதாசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்விவேகானந்தர் நினைவு மண்டபம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கம்பராமாயணம்தமிழ்நாடுநாலடியார்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வி. கே. பாண்டியன்நரேந்திர மோதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேவேந்திரகுல வேளாளர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐம்பெருங் காப்பியங்கள்அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுதிருவள்ளுவர்பத்துப்பாட்டுபீப்பாய்காமராசர்பிள்ளைத்தமிழ்முருகன்