தாண்டல் உலோகம்

வேதித் தனிமங்களின் தொடர்
(தாண்டல் உலோகங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாண்டல் உலோகங்கள் (Transition metals) என்பன d உபசக்திமட்டத்தில் இறுதி இலத்திரனைக் கொண்ட மூலகங்களாகும். இவை மூன்று ஆவர்த்தனங்களில் காணப்படும் முப்பது மூலகங்களைக் கொண்டுள்ளன. இவை சிக்கலயன்களை உருவாக்கக்கூடியவை.

IUPAC வரைவிலக்கணம்:-

தாண்டல் உலோகம் என்பது "நிரம்பாத d உப ஒழுக்கை உடைய ஒரு மூலகம் அல்லது நிரம்பாத d உப ஒழுக்கை உடைய நேரயனை உருவாக்கக் கூடிய ஒரு மூலகம்" ஆகும்[1].

IUPAC வரைவிலக்கணம் இவ்வாறு காணப்பட்டாலும் இவ்வரைவிலக்கணத்துக்குள் உள்ளடக்கப்படாத சிகாண்டியம், துத்தநாகம் ஆகிய மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் பல்வேறு புத்தகங்களில் உள்ளடக்கப்படுகின்றன. அதாவது பொதுவாக ஆவர்த்தன அட்டவணையின் அனைத்து d-தொகுப்பு மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் உள்ளடக்கப்படுகின்றன.

உள்ளடக்கப்படும் மூலகங்கள் தொகு

தாண்டல் உலோகங்கள்
கூட்டம்3456789101112
நான்காம் ஆவர்த்தன மூலகங்கள்Sc 21Ti 22V 23Cr 24Mn 25Fe 26Co 27Ni 28Cu 29Zn 30
ஐந்தாம் ஆவர்த்தன மூலகங்கள்Y 39Zr 40Nb 41Mo 42Tc 43Ru 44Rh 45Pd 46Ag 47Cd 48
ஆறாம் ஆவர்த்தன மூலகங்கள்57–71Hf 72Ta 73W 74Re 75Os 76Ir 77Pt 78Au 79Hg 80
ஏழாம் ஆவர்த்தன மூலகங்கள்89–103Rf 104Db 105Sg 106Bh 107Hs 108Mt 109Ds 110Rg 111Cn 112

இங்கு d10 s2 இலத்திரன் நிலையமைப்புள்ள நாகம், இரசம் ஆகிய உலோகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாகம் எப்போதும் நிரம்பிய d ஒழுக்கு உடைய Zn2+ அயனை உருவாக்குவதால் நாகத்தை தாண்டல் உலோகமாக IUPAC வகைப்பாட்டின் படி உள்ளடக்கப்பட முடியாது. எனினும் எளிமைத் தன்மைக்காக நாகம், இரசம் ஆகியவயும் தாண்டல் உலோகங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. செப்பு மூலக நிலையிலும், +1 ஒக்சியேற்ற நிலையிலும் முழுமையான d-ஒழுக்கைக் கொண்டிருந்தாலும், +2 ஒக்சியேற்ற நிலையைக் கொண்டிருப்பதால் அது தாண்டல் உலோகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுவான பண்புகள் தொகு

பல ஒக்சியேற்றல் நிலைகள் தொகு

தாண்டல் உலோகங்களின் விசேட பண்புகளில் ஒன்றாக பல ஒக்சியேற்ற நிலைகளைக் கொண்டிருத்தல் உள்ளது. உதாரணமாக மங்கனீசு 0, +2, +7 ஆகியவற்றைக் காட்டும்; இரும்பு பொதுவாக 0, +2, +3 ஆகிய நிலைகளைக் காட்டும்; எனினும் மங்கனீசு வரையான அனைத்து தாண்டல் மூலகங்களும் அவற்றின் இறுதி சக்திப்படியிலுள்ள இலத்திரன்களின் எண்ணிக்கைக்கு சமனானளவு உயர் ஒக்சியேற்ற நிலைகளைக் காட்டுகின்றன. உதாரணமாக வனேடியம் 0 தொடக்கம் +5 வரையும், மங்கனீசு 0 தொடக்கம் +7 வரையும் காட்டுகின்றன. இதனால் தாண்டல் மூலகங்கள் பல்வேறு வலுவளவுகளுடன் சேர்வைகளை ஆக்குகின்றன. உதாரணமாக இரும்பு ஆக்சிசனுடன் தாக்கமடைந்து +2 ஒக்சியேற்ற நிலையுடன் FeO அல்லது +3 ஒக்சியேற்ற நிலையுடன் Fe2O3 ஆகிய இரு சேர்வைகளை உருவாக்கலாம்.

நிறமுள்ள சேர்வைகள் தொகு

இடமிருந்து வலமாக தாண்டல் உலோகங்களின் நிறமுள்ள சேர்வைகள்: Co(NO
3
)
2
(செந்நிறம்); K
2
Cr
2
O
7
(செம்மஞ்சள்); K
2
CrO
4
(மஞ்சள்); NiCl
2
(வெளிர் நீலம்); CuSO
4
(நீலம்); KMnO
4
(ஊதா).

தாண்டல் உலோகங்களின் இலத்திரன்கள் இலகுவாக சக்தியை உறிஞ்சி அருகருகே உள்ள ஒழுக்குகளிடையே பரிமாற்றப்படுவதால் அவை உறிஞ்சும் சக்திக்கேற்றபடி நிறத்தைக் காலுகின்றன. குறிப்பாக தாண்டல் உலோகம் அதியுயர் ஒக்சியேற்ற நிலையில் இருக்கும் போது நிறத்தை இலகுவாக வெளிப்படுத்துகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "transition element". Compendium of Chemical Terminology Internet edition.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=தாண்டல்_உலோகம்&oldid=3590861" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchவைகாசி விசாகம்மகேந்திரசிங் தோனிமனித உரிமைதமிழ்இரண்டாம் உலகப் போர்பசுபதி பாண்டியன்சுப்பிரமணிய பாரதிதிருக்குறள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இந்திய அரசியலமைப்புபாரதிதாசன்பதினெண் கீழ்க்கணக்குவி. கே. பாண்டியன்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்குணங்குடி மஸ்தான் சாகிபுதிருமூலர்இராமலிங்க அடிகள்தொல்காப்பியம்இராஜீவ் காந்திசிறப்பு:RecentChangesஅயோத்தி தாசர்சிலப்பதிகாரம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்வெங்கடேஷ் ஐயர்எட்டுத்தொகைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்அண்ணாமலை குப்புசாமிமாணிக்கவாசகர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கம்பராமாயணம்முருகன்ஐம்பெருங் காப்பியங்கள்