சிபு வானூர்தி நிலையம்

சரவாக்கில் உள்ள வானூர்தி நிலையம்

சிபு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: SBWஐசிஏஓ: WBGS); (ஆங்கிலம்: Sibu Airport; மலாய்: Lapangan Terbang Sibu) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சிபு நகருக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[1]

சிபு வானூர்தி நிலையம்
Sibu Airport

சிபு வானூர்தி நிலையம்
  • ஐஏடிஏ: SBW
  • ஐசிஏஓ: WBGS
    Sibu Airport is located in மலேசியா
    Sibu Airport
    Sibu Airport
    சிபு வானூர்தி
    நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்மலேசிய அரசாங்கம்
Kerajaan Malaysia
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
(Malaysia Airports Berhad)
சேவை புரிவதுபிந்தாங்கோர், சரிக்கே, காப்பிட், சிபு, சரவாக், கிழக்கு மலேசியா)
அமைவிடம்சிபு; சரவாக், கிழக்கு மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL10 ft / 3.048 m
ஆள்கூறுகள்02°15′51″N 111°58′57″E / 2.26417°N 111.98250°E / 2.26417; 111.98250
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
மீட்டர்அடி
13/312,7459,006தார்
புள்ளிவிவரங்கள் (2020)
பயணிகள்
போக்குவரத்து
569,625 ( 67.5%)
சரக்கு டன்கள்1,406 ( 11.7%)
வானூர்தி
போக்குவரத்து
7,122 ( 54.5%)

இந்த வானூர்தி நிலையம், சரவாக் மாநிலத்தின் சிபு பிரிவு பகுதியில் வாழும் மக்களுக்கு உள்நாட்டுச் சேவைகளை வழங்கி வரும் வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.

2018-ஆம் ஆண்டில், இந்த வானூர்தி நிலையத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 1,579,528. அதே வேளையில் 20,869 விமான இயக்கங்களும் நடைபெற்று உள்ளன. சிபு நகர மையத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் தென் பகுதியில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.[2]

பொது

தொகு

இந்த வானூர்தி நிலையம் மலேசியாவில் 11-ஆவது விறுவிறுப்பான வானூர்தி நிலையமாகவும்; சரவாக்கில் மூன்றாவது விறுவிறுப்பான வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது.

ஏப்ரல் 2009-இல், சிபு வானூர்தி நிலையத்தின் முனையத் தளத்தை (Terminal Building) மேம்படுத்துவதற்காக RM 150 மில்லியன் வழங்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட முனையம் 31 ஜூலை 2012-இல் அதன் செயல்பாட்டைத் தொடங்கியது.[3]

சரவாக் கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் மிரி வானூர்தி நிலையம் ஆகியவற்றுக்குப் பிறகு, சிபு வானூர்தி நிலையம் மூன்றாவது பெரிய வானூர்தி நிலையமாகும். மொத்த விமான நிலைய முனையத் தளத்தின் பரப்பளவு 15,240 சதுர.மீ. ஆகும்.[4]

வரலாறு

தொகு

சிபுவில் முதல் வானூர்தி நிலையம், தெக்கு (Teku) நகரில் இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர்களால் ஒரு சாதாரண வானூர்தி நிலையமாக கட்டப்பட்டது. இருப்பினும், வானூர்தி ஓடுதளம் நேச நாட்டுப் படைகளால் கடுமையாகக் குண்டுகள் வீசப்பட்டுத் தாக்கப்பட்டது. வானூர்தி நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் 1951-இல் தொடங்கின.

தொடக்கத்தில், ஓடுபாதை 3,600 அடி நீளம்; 150 அடி அகலத்தில் கட்டப்பட்டது. முதல் வானூர்தி 1952 மே 21-ஆம் தேதி இந்த வானூர்தி நிலையத்தில் தரையிறங்கியது. 1 ஜூலை 1952 சூலை 21-ஆம் தேதி வழக்கமான சேவைகளுக்காகத் திறக்கப்பட்டது.

முதல் சேவை

தொகு

மலேசியா எயர்லைன்சு (Malayan Airways) நிறுவனம், ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் சிங்கப்பூரிலிருந்து கூச்சிங், சிபு, லபுவான் ஆகிய இடங்களுக்கு தன் வானூர்திகளைப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தியது. 1959-இல் ஓடுபாதை 4,500 அடிக்கு 150 அடியாக நீட்டிக்கப்பட்டது.[5]

புதிய வானூர்தி நிலையத்தின் செயல்பாடு அதிகாரப்பூர்வமாக 1 ஜூன் 1994-இல் தொடங்கியது. அப்போது அந்த வானூர்தி நிலையம் சிபு நகரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்து இருந்தது. 31 மே 1994-இல், நான்கு மலேசியா எயர்லைன்சு வானூர்திகள் முதன் முதலாகத் தரையிறங்கின.[5]

காட்சியகம்

தொகு

வானூர்திச் சேவைகள்

தொகு
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர்ஏசியா ஜொகூர் பாரு,[6] கோத்தா கினபாலு, கோலாலம்பூர்–சிப்பாங், கூச்சிங், சிங்கப்பூர்[7]
மலேசியா எயர்லைன்சு கோலாலம்பூர்–சிப்பாங்
மலேசியா எயர்லைன்சு
மாஸ் சுவிங்சு
பிந்துலு, மிரி, முக்கா
மை எயர்லைன் கோலாலம்பூர்–சிப்பாங் (18 சனவரி 2023)[8]

சரக்குச் சேவை

தொகு
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
உலக சரக்கு விமானச் சேவை
(World Cargo Airlines)
கோலாலம்பூர்–சிப்பாங், கூச்சிங்

போக்குவரத்து புள்ளிவிவரங்கள்

தொகு
பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானூர்திகளின் புள்ளிவிவரங்கள்
ஆண்டுபயணிகள்
வருகை
பயணிகள்
% மாற்றம்
சரக்கு
(டன்கள்)
சரக்கு
% மாற்றம்
வானூர்தி
நகர்வுகள்
வானூர்தி
% மாற்றம்
1995624,738 2,455 18,905
1996654,785 4.811,758 28.3920,243 7.08
1997631,701 3.531,904 8.3019,551 3.42
1998555,483 12.071,499 21.2717,099 12.54
1999620,830 11.761,745 16.4116,096 5.87
2000657,375 5.891,874 7.3915,743 2.19
2001725,449 10.362,006 7.0416,995 7.95
2002759,704 4.721,916 4.4917,113 0.69
2003817,687 7.631,701 11.2216,885 1.33
2004903,108 10.451,567 7.8817,650 4.53
2005920,930 1.971,377 12.1317,330 1.81
2006898,923 2.391,040 24.4715,638 9.76
2007809,955 9.90892 14.2312,536 19.84
2008831,772 2.70735 17.5014,672 17.00
2009939,732 12.98856 16.4617,449 18.93
20101,009,002 7.401,133 32.3518,985 8.80
20111,133,903 12.291,153 1.7718,211 4.08
20121,204,267 6.21,612 39.815,923 12.56
20131,383,887 14.91,413 12.317,196 8.0
20141,440,935 4.11,460 3.322,508 30.9
20151,454,360 0.91,304 10.721,172 5.9
20161,469,341 1.01,048 19.624,806 14.6
20171,497,412 1.91,285 22.618,598 25.0
20181,579,528 5.51,443 12.220,869 12.2
20191,750,876 10.91,259 12.816,748 19.7
2020569,625 67.51,406 11.77,122 54.5
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[9]

புள்ளிவிவரங்கள்

தொகு
சிபு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு வானூர்திச் சேவை: ஏப்ரல் 2019
தர
வரிசை
இலக்குகள்பயணங்கள்
(வாரம்)
வானூர்தி
நிறுவனங்கள்
1 கோலாலம்பூர் கோலாலம்பூர்–சிப்பாங்53ஏர் ஏசியா, மலேசியா எயர்லைன்சு
2  சரவாக் கூச்சிங்35ஏர் ஏசியா
3  சரவாக் மிரி28மாஸ் சுவிங்சு (MASwings)
4  சரவாக் பிந்துலு14மாஸ் சுவிங்சு (MASwings)
4 சபா கோத்தா கினபாலு14ஏர் ஏசியா
6 ஜொகூர் பாரு10ஏர் ஏசியா
7  சரவாக் முக்கா3மாஸ் சுவிங்சு (MASwings)
சிபு வானூர்தி நிலையத்தின் போக்குவரத்து
தொடக்கம்அடைவு20082009201020112012201320142015201620172018
சிபுகோலாலம்பூர்167,582185,734216,571227,381247,624301,394309,103325,257344,863359,836368,803
கோலாலம்பூர்சிபு169,787187,536218,651232,530246,075300,070308,265326,003345,427364,552365,752
சிபுகூச்சிங்35,136156,361167,033206,421215,094233,064239,622236,735226,719232,813260,446
கூச்சிங்சிபு32,801153,711162,872198,833216,898230,304236,371238,600228,843234,019259,492
சிபுமிரி31,92632,17732,3184,71851,57053,76158,52250,75650,77845,11446,510
மிரிசிபு26,02832,73032,9414,44349,46952,26556,17950,49851,09144,64847,214
சிபுபிந்துலு5,40210,35812,97316,88810,68710,52412,19210,46610,57610,57011,829
பிந்துலுசிபு1,26378410612,83113,88110,39611,38311,56811,40710,10411,274
சிபுகோத்தா கினபாலு18,34047,36540,13338,31935,22734,96135,80834,99334,83231,98630,497
கோத்தா கினபாலுசிபு28,54948,23440,10142,41342,69036,48538,16634,82634,33733,02729,674
Source: Malaysia Airports Holdings Berhad[10]
சிபு வானூர்தி நிலையத்தின் போக்குவரத்து (பொது)
இடங்கள்20082009201020112012201320142015201620172018
சிபு<->கோலாலம்பூர்337,369373,270435,222459,911493,699601,464617,368651,260690,290724,388734,555
சிபு<->கூச்சிங்67,937310,072329,905405,254431,992463,368475,993475,335455,562466,832519,938
சிபு<->மிரி57,95464,90765,2599,161101,039106,026114,701101,254101,86989,76293,724
சிபு<->பிந்துலு6,66511,14213,07929,71924,56820,92023,57522,03421,98320,67423,103
சிபு<->கோத்தா கினபாலு46,88995,59980,23480,73277,91771,44673,97469,81969,16965,01360,171
Source: Malaysia Airports Holdings Berhad[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Official Portal Ministry of Transportation, Malaysia. List of Airports".
  2. WBGS – SIBU பரணிடப்பட்டது 2014-04-14 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
  3. New Sibu airport terminal commences operation
  4. "Tender Briefing for Package Deal (Sarawak)" (PDF). MAHB. 15 March 2019. பார்க்கப்பட்ட நாள் 10 July 2019.
  5. "Sibu Airport:History". DCA Sarawak. Archived from the original on 25 February 2012. பார்க்கப்பட்ட நாள் 9 January 2022.
  6. "AirAsia adds 437 extra flights for Hari Raya | New Straits Times". 3 April 2019.
  7. Andy Chua (8 November 2022). "AirAsia to run direct flights between Singapore and Sibu from Dec 16" (in en). The Star. https://www.thestar.com.my/news/nation/2022/11/08/airasia-to-run-direct-flights-between-singapore-and-sibu-from-dec-16. 
  8. "MyAirline Promo", MyAirline, 2022, பார்க்கப்பட்ட நாள் 5 December 2022
  9. "Malaysia Airports: Airports Statistics 2018" (PDF). malaysiaairports. 2 April 2019. Archived from the original (PDF) on 11 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. 10.0 10.1 "Malaysia Airports Yearly Statistic". Archived from the original on 2020-11-11. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் காண்க

தொகு
🔥 Top keywords: சிறப்பு:Searchமுதற் பக்கம்தியாகத் திருநாள்தமிழ்தென்கிழக்காசியாசுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தந்தையர் நாள்பெண் தமிழ்ப் பெயர்கள்ஹரிஷ் ராகவேந்திராவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஜம்புத் தீவு பிரகடனம்தம்பி ராமையாபவன் கல்யாண்ஐம்பெருங் காப்பியங்கள்காமராசர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்திருக்குறள்விடுதலை பகுதி 1தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புதிவ்யா துரைசாமிஅழகம்பெருமாள்அறுபடைவீடுகள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசிறப்பு:RecentChangesவிஜய் சேதுபதிஆண் தமிழ்ப் பெயர்கள்கார்லசு புச்திமோன்பிரீதி (யோகம்)சிலப்பதிகாரம்தமிழ்நாடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மருது பாண்டியர்பீப்பாய்தஞ்சைப் பெருவுடையார் கோயில்உற்பத்திவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)