சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)

இந்தியாவில் உள்ள மாநில அரசு உறுப்பினர்

சட்டமன்ற உறுப்பினர் (ச.ம.உ) (Member of Legislative Assembly = MLA) என்பவர் இந்தியாவில் ஒரு தொகுதியின் வாக்காளர்களால் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்படும் ஒரு பிரதிநிதியாவார். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட சட்டமன்றங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்தின் எதிர்காலம் மற்றும் மாநில நிர்வாகத்திற்கு அம்மாநிலத்தின் சட்டமன்றமே முதன்மைக் காரணியாக உள்ளன. அவற்றின் உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

தகுதி

தொகு

நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு உரிய தகுதி விதிகள், இதற்கும் உரியதாகும். அதன்படி இந்திய குடியுரிமை உள்ள எவரும், சட்டமன்றத் தேர்தலில் பங்கு கொண்டு வெற்றி பெறலாம். அவருக்கு வயது இருபத்தைந்துக்கு மேல் இருக்க வேண்டும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "இந்திய தேர்தல் ஆணையம்". Archived from the original on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிகாமராசர்பாரதிதாசன்எத்தனால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)பன்னாட்டு யோகா நாள்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்யோகக் கலைகண்ணதாசன்விநாயகர் அகவல்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசாராயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிமுருகன்காரைக்கால் அம்மையார்வைணவ அடியார்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்யோகாசனம்தொல்காப்பியம்கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்பத்துப்பாட்டுசூன் 21கார்லசு புச்திமோன்