உத்மூர்த்தியா

உத்மூர்த்தியா (உருசியம்: Удму́ртия, ஒ.பெ Udmurtiya, பஒஅ[ʊˈdmurtʲɪjə]) அல்லது உத்மூர்த் குடியரசு (உருசியம்: Удму́ртская Pеспу́блика, ஒ.பெ Udmurtskaya Respublika, பஒஅ[ʊˈdmurtskəjə rʲɪsˈpublʲɪkə]) என்பது உருசியக் குடியரசுக்களுள் ஒன்று. இழெவ்ஸ்க் இதன் தலைநகர். 2010ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இக்குடியரசின் மக்கள்தொகை: 15,21,420.

உத்மூர்த் குடியரசு
Удмуртская Республика
Other transcription(s)
 • UdmurtУдмурт Элькун
உத்மூர்த் குடியரசு-இன் கொடி
கொடி
உத்மூர்த் குடியரசு-இன் சின்னம்
சின்னம்
பண்: உத்மூர்த் குடியரசின் நாட்டுப்பண்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்வோல்கா[1]
பொருளாதாரப் பகுதிஉரால்[2]
தலைநகர்இழெவ்ஸ்க்
அரசு
 • நிர்வாகம்உத்மூர்த் குடியரசின் மாநில மன்றம்[3]
 • தலைவர்[3]அலெக்சாந்தர் சலவ்யோவ்[4]
பரப்பளவு
 • மொத்தம்42,100 km2 (16,300 sq mi)
 • பரப்பளவு தரவரிசை57th
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[6]
 • மொத்தம்15,21,420
 • மதிப்பீடு 
(2018)[7]
15,13,044 (−0.6%)
 • தரவரிசை30th
 • அடர்த்தி36/km2 (94/sq mi)
 • நகர்ப்புறம்
69.2%
 • நாட்டுப்புறம்
30.8%
நேர வலயம்ஒசநே+4 ([8])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-UD
அனுமதி இலக்கத்தகடு18
OKTMO ஐடி94000000
அலுவல் மொழிகள்உருசியம்;[9] உத்மூர்த் மொழி[10]
இணையதளம்http://www.udmurt.ru/en/

வரலாறு

தொகு

உத்மூர்த் மக்களின் பண்பாடு மற்றும் பாரம்பரிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் நவம்பர் 4, 1920ல் வோத்ஸ்க் தன்னாட்சி ஓப்லாஸ்த் உருவாக்கப்பட்டது;[11] ஜனவரி 1, 1932ல் உத்மூர்த் தன்னாட்சி ஓப்லாஸ்த் எனப் பெயர் மாற்றப்பட்டது. டிசம்பர் 28, 1934ல் [11] இது மறுசீரமைக்கப்பட்டு உத்மூர்த் தன்னாட்சி சோவியத் சமத்துவக் குடியரசு என உருவானது. சோவியத் ஒன்றியம் பிளவுபட்டது முதல் இது உத்மூர்த் குடியரசு என அழைக்கப்படுகின்றது.இரண்டாம் உலகப் போர்ச் சூழலில் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய மேற்கு எல்லைப் பகுதிகளிலிருந்த பல தொழிற்சாலைகள் உத்மூர்த்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன.

புவியியல்

தொகு

கிழக்கு ஐரோப்பியச் சமவேளியின் கிழக்கு பகுதியில் காம ஆற்றுக்கும் வியாத்கா ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ள இக்குடியரசில் செப்த்ஸா ஆறு, ஈழ் ஆறு, காம ஆறு, கில்மெஸ் ஆறு, சீவ ஆறு முதலிய ஆறுகள் பாய்கின்றன.

இயற்கை வளங்கள்

தொகு

இக்குடியரசு பெற்றோலிய எண்ணெய், கரி, கனிம நீர் முதலிய இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. 2002ன் கணிப்பின்படி இங்கு 820 மில்லியன் டன் எண்ணெய் இருப்பு உள்ளது. ஆண்டுதோறும் 7 மில்லியன் டன் எண்ணெய் எடுக்கப்படுகின்றது.பெரும்பாலும் ஊசியிலைக் காடுகளைக் கொண்டுள்ள இக்குடியரசின் வனப்பகுதி 40%ஆக உள்ளது

காலநிலை

தொகு

சராசரி சனவரி வெப்பநிலை: −14.5 °C (5.9 °F)
சராசரி சூலை மாத வெப்பநிலை: +18.3 °C (64.9 °F)
ஆண்டு சராசரி மழைபொழிவு 400–600 மிமீ

மக்கள் வகைப்பாடு

தொகு

2008ம் ஆண்டு வரை சரிவடைந்து வந்த இக்குடியரசின் மக்கள்தொகை 2010ம் ஆண்டு கணக்கின்படி சற்று ஏற்றமடைந்துள்ளது. இச்சரிவு நகர்ப்புரத்தில் பெருமளவில் இருந்தது.

பிறப்பு இறப்பு விவரங்கள்

தொகு

மூலம்[12]

ஆண்டுசராசரி மக்கள்தொகை (x 1000)பிறப்புஇறப்புஇயல்பு மாற்றம்தோராயமான பிறப்பு விகிதம் (தலா 1000)தோராயமான இறப்பு விகிதம் (தலா 1000)இயல்பு மாற்றம் (தலா 1000)மொத்தக் கருவுறுதல் விகிதம்
19701,42123,28613,26510,02116.49.37.1-
19751,45926,49714,66611,83118.210.18.1-
19801,50827,60116,86210,73918.311.27.1-
19851,56229,34317,55311,79018.811.27.5-
19901,61424,34515,8168,52915.19.85.3-
19911,61922,21316,0026,21113.79.93.8-
19921,62320,07418,0632,01112.411.11.2-
19931,62217,12621,923- 4,79710.613.5- 3.0-
19941,61916,87424,183- 7,30910.414.9- 4.5-
19951,61515,48422,445- 6,9619.613.9- 4.3-
19961,61014,87720,641- 5,7649.212.8- 3.6-
19971,60615,36819,881- 4,5139.612.4- 2.8-
19981,60316,13019,080- 2,95010.111.9- 1.8-
19991,59815,79320,745- 4,9529.913.0- 3.1-
20001,59216,25621,852- 5,59610.213.7- 3.5-
20011,58316,63622,810- 6,17410.514.4- 3.9-
20021,57217,74624,520- 6,77411.315.6- 4.3-
20031,56117,98224,571- 6,58911.515.7- 4.2-
20041,55218,23823,994- 5,75611.715.5- 3.7-
20051,54317,19024,006- 6,81611.115.6- 4.4-
20061,53517,48022,011- 4,53111.414.3- 3.0-
20071,52919,66721,727- 2,06012.914.2- 1.3-
20081,52520,42121,436- 1,01513.414.1- 0.7-
20091,52321,10920,22788213.913.30.61,73
20101,52221,68421,10058414.313.90.41.78
20111,51921,90520,3581,54714.413.41.01.83
20121,51823,22519,5263,69915.312.92.41.98
20131,51722,13819,3322,80614.612.71.91.92
20141,51722,11519,4642,65114.612.81.81.95(கணி)

இனக் குழுக்கள்

தொகு

2010ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி[6] உத்மூர்த் குடியரசின் மக்கள்தொகையில் 62.2% உருசியர்கள் 28% பாரம்பரிய உத்மூர்த் இனமக்கள் 6.7% தாத்தார்கள் 0.6% உக்ரேனியர்கள் 0.6% மாரி மக்கள் எனப் பலவகையான இனக்குழுக்கள் உள்ளனர்.உலகிலுள்ள உத்மூர்த் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கினர் இக்குடியரசில் வாழ்கின்றனர்.[13]

பண்பாடு

தொகு

உத்மூர்த்தியாவின் வரலாற்றையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் வகையில் எட்டு தொழில்முறை திரையரங்குகளும் ஒரு பாரிய இசைக்குழு சமூகமும் பத்திற்கும் மேற்பட்ட மாநில மற்றும் பொது அருங்காட்சியகங்களும் உள்ளன. சராபுல் வரலாறு மற்றும் பண்பாட்டு அருங்காட்சியகம், வோத்கின்ஸ்க்கிலுள்ள சாய்க்கோவ்ஸ்கி அருங்காட்சியகம் முதலியன குறிப்பிடத்தகுந்தன.பழைமையான ஆயுத அருங்காட்சியகங்களில் ஒன்றும் நவம்பர் 2004 ல் அர்ப்பணிக்கப்பட்ட கலாஷ்னிக்கவ் அருங்காட்சியகமும் இழெவ்ஸ்க்கில் உள்ளது. சோவியத் ஒன்றியம் உடைந்தபின் உரால் பகுதி மக்களால் பண்பாட்டு வருநிகழ்வியம் (Ethnofuturism) என்ற பண்பாட்டு இயக்கம் பரிணமித்துள்ளது.[14]

சமயம்

தொகு

2012ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, உத்மூர்த் மக்கள் தொகையில் 33.1% உருசிய மரபுவழித் திருச்சபையையும் 5% இணைப்பில்லாத பொதுவான கிறித்துவத்தையும்2% பிற மரபுவழி திருச்சபையையும் 4% இசுலாத்தையும் 2% ஸ்லாவிய நாட்டுப்புறச்சமயம் அல்லது உத்மூர்த் நாட்டுப்புறச்சமயத்தையும் 1% சீர்திருத்தத் திருச்சபை யையும் 1% பழைய நம்பிக்கையையும் பின்பற்றுகின்றனர். மேலும் மக்கள்தொகையில் 29% பேர் இறை நம்பிக்கை கொண்ட ஆனால் சமயப்பற்றற்றவர்கள், 19% நாத்திகர்கள் 3.9% சமயம் குறிப்பிட விரும்பாதோர் அல்லது பிற சமயங்களை பின்பற்றுவோர்கள்.

அரசியல்

தொகு

உத்மூர்த் குடியரசின் தலைவர் உருசியக் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். பிப்ரவரி 2004 இல் அலெக்சாண்டர் சலவ்யோவ் உத்மூர்த் குடியரசின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கல்வி

தொகு

இக்குடியரசில் உயர்கல்வி பெற உத்மூர்த் மாநில பல்கலைக்கழகம் மற்றும் இழெவ்ஸ்க் மாநில தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன.

சான்றுகள்

தொகு
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. 3.0 3.1 Constitution, Article 9.1
  4. "Михаил Бабич представил исполняющего обязанности Главы Удмуртии". Official website of the Udmurt Republic. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  6. 6.0 6.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  8. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  9. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  10. Constitution, Article 8
  11. 11.0 11.1 11.2 Administrative-Territorial Structure of the Union Republics. 1987., p. 57
  12. "உருசிய அரசின் புள்ளியியல் வெளியீடு". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-24.
  13. "General Information". Land and People. Udmurtia Official. Archived from the original on 15 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014.
  14. Ethnofuturism
  • №663-XII 7 декабря 1994 г. «Конституция Удмуртской Республики», в ред. Закона №62-РЗ от 22 ноября 2007 г. (#663-XII December 7, 1994 Constitution of the Udmurt Republic, as amended by the Law #62-RZ of November 22, 2007. ).
  • "СССР. Административно-территориальное деление союзных республик. 1987." (USSR. Administrative-Territorial Structure of the Union Republics. 1987) / Составители В. А. Дударев, Н. А. Евсеева. — М.: Изд-во «Известия Советов народных депутатов СССР», 1987. — 673 с.

வெளியிணைப்புகள்

தொகு


"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=உத்மூர்த்தியா&oldid=3928009" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்