உடற்பிடிப்பு

உடற்பிடிப்பு (massage) செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அப்பகுதிக்கு அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது.

உடற்பிடிப்பு செய்யும் முறை

தொகு

கை கால்களிலிருந்து மசாஜை துவங்கவேண்டும். அடுத்து நெஞ்சு, கீழ்வயிறு, பின்புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்யவேண்டும். பின்புறத்தில் மசாஜ் செய்ய துணியைப் பயன்படுத்தலாம். மசாஜøக்குப் பின் குளிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் நனைந்த துணியால் உடம்பைத் துடைக்கலாம்.

உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மசாஜ் தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்கவேண்டும்.

எப்போது உடற்பிடிப்பு தவிர்க்க வேண்டும்?

தொகு

காய்ச்சலின் போது, கர்ப்பகாலத்தில் கூடாது. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, கட்டிகள் இருந்தால் கீழ்வயிற்றில் மசாஜ் செய்யக்கூடாது. தோல்வியாதிகள் உள்ளவருக்கு மசாஜ் ஏற்றதல்ல.

உடற்பிடிப்பு பயன்கள்

தொகு

மென்மையான மசாஜ் நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து அவற்றுக்கு இதமளிக்கும். சற்று கடுமையான மசாஜ் தளர்ந்த நரம்புகளைத் தூண்டி அவற்றின் திறனை அதிகரிக்கும்.

கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதால் ஜீரண மண்டலம் தூண்டப்பட்டு கழிவுகள் நன்கு வெளியேறும். கல்லீரலின் ஆற்றல் அதிகரிக்கும்.

முறையான மசாஜ் இருதய சுமையைக் குறைக்கும்.

தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லாக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளிலிருந்து அந்த லாக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன் மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.

மசாஜால் தோலிலுள்ள நுண்துளைகள் திறக்கப்பட்டு வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.

ஊடகங்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=உடற்பிடிப்பு&oldid=3025549" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்