அலைநீளம்

இயற்பியலில், அலைநீளம் என்பது ஓர் அலையின் இரு மீளும் பகுதிகளிடையேயான தூரம். நீளம் அளக்கப் பயன்படும் எல்லா அளவீடுகளும் அலைநீளத்தையும் அளக்கப்பயன்படுத்தலாம். பொதுவாக இப்பதம் வானொலி மற்றும் மின் காந்த அலைகளுக்கே பயன்படுத்தப்படும். சைன் அலை வடிவங்களில் இரு முடிகள் அல்லது இரு தாழிகளிடையேயான தூரம் அலைநீளமாக கொள்ளப்படும்.

அலைநீளத்தை விளக்கும் வரிப்படம்.

அலைநீளமானது பொதுவாக கிரேக்க மொழியின் எழுத்தான லெம்டாவினால் (λ), வகைக்குறிக்கப்படும். குறித்த நிலையான வேகத்துடன் நகரும் ஒரு சைன் வடிவ அலையைக் கருதினால், அதன் அலைநீளமானது, அதன் அதிர்வெண்ணுக்கு நேர்மாறவிகித சமனாகும்: அதாவது, உயர்ந்த அதிர்வெண்களைக் கொண்ட அலைகள், குறைந்த அலைநீளத்தை கொண்டிருக்கும், அதேவேளை, குறைந்த அதிர்வெண்ணைக் கொண்ட அலைகள், கூடிய அலைநீளத்தைக் கொண்டிருக்கும்.[1]

அலையானது ஒரு முழு அலை இயக்கத்தை ஆற்றி முடிக்க எடுக்கும் நேரம் அலைவு காலம் எனப்படும்.

சைன் வடிவ அலையின் அலைநீளம் தொகு

மாறாத வேகம் v ஐக் கொண்டு நகருமொரு சைன் வடிவ அலையின் அலைநீளம் λ ஐக் கணித்துக் கொள்ள பின்வரும் சமன்பாடு பாவிக்கப்படும்.[2]

இங்கு v எனப்படுவது, குறித்த அலையின் அலைவு காலத்தில் அதன் வேகமாகும். அத்தோடு, f ஆனது, அலையின் அதிர்வெண்ணைக் குறித்து நிற்கும்.

உசாத்துணைகள் தொகு

  1. Theo Koupelis and Karl F. Kuhn (2007). In Quest of the Universe. Jones & Bartlett Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0763743879.
  2. David C. Cassidy, Gerald James Holton, Floyd James Rutherford (2002). Understanding physics. Birkhäuser. pp. 339 ff. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0387987568.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)

மேலும் பார்க்க தொகு

அதிர்வெண்

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=அலைநீளம்&oldid=2229400" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்காடுவெட்டி குருதமிழ்சுப்பிரமணிய பாரதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சிறப்பு:RecentChangesதிருக்குறள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அறுபடைவீடுகள்பெண் தமிழ்ப் பெயர்கள்வி. கே. பாண்டியன்சிலப்பதிகாரம்திவ்யா துரைசாமிதமிழ்நாடுபாரதிதாசன்விநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்எட்டுத்தொகைமகேந்திரசிங் தோனிகம்பராமாயணம்ஐம்பெருங் காப்பியங்கள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அண்ணாமலை குப்புசாமிபீப்பாய்பீலா ராஜேஷ்ராஜேஸ் தாஸ்கண்ணதாசன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திருவள்ளுவர்கார்லசு புச்திமோன்அனுராதா ஸ்ரீராம்இந்திய அரசியலமைப்புமாதம்பட்டி ரங்கராஜ்காமராசர்