ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் (Srivilliputhur Taluk) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரம் உள்ளது. இவ்வட்டத்திலிருந்து வத்திராயிருப்பு வட்டம் பிரிந்த பின், இந்த வட்டத்தின் கீழ் மல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர், பிள்ளையார்குளம் என 3 உள்வட்டங்களும், 26 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பிரிப்பு தொகு

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் 3 உள்வட்டங்களைக் கொண்டு புதிய வட்டமாக வத்திராயிருப்பு வட்டம் 18 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 293,209 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 146,005 ஆண்களும், 147,204 பெண்களும் உள்ளனர். 82,678 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 48.9% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 77.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,008 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 27,991 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 78,505 மற்றும் 506 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.52%, இசுலாமியர்கள் 2.06%, கிறித்தவர்கள் 4.14% மற்றும் பிறர் 0.28% ஆகவுள்ளனர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்".
  2. "ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்" (PDF).
  3. "Watrap taluk starts administrative functions". The Hindu
  4. "Srivilliputtur Taluka Population, Caste, Religion Data".
🔥 Top keywords: முத்தொள்ளாயிரம்தேம்பாவணிஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புபாவேந்தர் பாரதிதாசன் விருதுதினத்தந்திதாதாசாகெப் பால்கே விருதுஔவையார் (சங்ககாலப் புலவர்)கிறிஸ்துவின் இரண்டாம் வருகைசிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிபதினெண் கீழ்க்கணக்குகரகாட்டம்முதற் பக்கம்சத்திய சோதனை (நூல்)சுப்பிரமணிய பாரதிசுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்திருக்குறள்மனோன்மணீயம்உத்தர காண்டம்நன்னெறி (நூல்)தமிழ்த்தாய் வாழ்த்து (புதுச்சேரி)அசோகர் கல்வெட்டுக்கள்பாரதிதாசன்வெண்பாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கிசான் கடன் அட்டைதமிழ்இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்நிர்மலா சீதாராமன்புறநானூறுஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிராவிட மகாஜன சபைதெருக்கூத்துஎட்டுத்தொகைமுதலாம் இராஜராஜ சோழன்நிதி ஆயோக்