விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள்
விக்கிப்பீடியா கட்டுரைகளின் இறுதியில் கட்டுரைக்கு தொடர்புடைய பிற வலைத்தளங்களுக்கு இணைப்பு தரலாம். அவ்வாறு தரும் போது கவனத்தில் கொள்ள வேண்டியன:
- தரப்படும் வெளியிணைப்பு தரமான, பயனுடைய உள்ளடக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
- நீண்ட நாட்களுக்கு உயிர்ப்புடன் இருக்கக் கூடிய பக்கங்களை இணைக்கலாம்.
- ஓர் இணைப்பு, மேற்கோள்களிலோ உசாத்துணைகளிலோ ஏற்கனவே இடம் பெற்றிருந்தால், மீண்டும் அதை வெளி இணைப்புகளில் தரக்கூடாது.
- பதிப்புரிமை மீறியிருக்கக் கூடிய பக்கங்களுக்கு இணைப்பு தரக்கூடாது.
- எரித இணைப்புகளையும், நச்சு நிரல் கொண்ட பக்கங்களையும் இணைக்கக் கூடாது.
- ஒரு பயனர் தனது சொந்த அல்லது தான் தொடர்புபட்ட வலைத்தளத்துக்கோ, வலைப்பதிவுக்கோ வெளி இணைப்பு தரக்கூடாது.
- வணிக நோக்குடன் வெளி இணைப்புகளை சேர்க்கக் கூடாது. எ. கா. சிம்லா கட்டுரையில் ஒரு பயண முகமையின் தளத்தை இணைத்தல்.
- ஒரு விக்கிப்பயனரின் பக்கத்தை மற்றொரு விக்கிப்பயனர் இணைப்பதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஆதாய முரண் (Conflict of Interest) ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
- மேற்கோள்கள், உசாத்துணைகள் போன்ற கட்டுரையின் இதர பகுதிகளிலும் வணிக வெளியிணைப்புகளைத் தவிர்க்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு புத்தக்கத்தை மேற்கோளாகத் தருவது என்றால் அதன் பெயர், ISBN விவரங்கள் தந்தால் போதும். அதனை விற்கும் தளத்துக்கு இணைப்பு தர வேண்டியதில்லை.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்காடுவெட்டி குருதமிழ்சுப்பிரமணிய பாரதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சிறப்பு:RecentChangesதிருக்குறள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அறுபடைவீடுகள்பெண் தமிழ்ப் பெயர்கள்வி. கே. பாண்டியன்சிலப்பதிகாரம்திவ்யா துரைசாமிதமிழ்நாடுபாரதிதாசன்விநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்எட்டுத்தொகைமகேந்திரசிங் தோனிகம்பராமாயணம்ஐம்பெருங் காப்பியங்கள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அண்ணாமலை குப்புசாமிபீப்பாய்பீலா ராஜேஷ்ராஜேஸ் தாஸ்கண்ணதாசன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திருவள்ளுவர்கார்லசு புச்திமோன்அனுராதா ஸ்ரீராம்இந்திய அரசியலமைப்புமாதம்பட்டி ரங்கராஜ்காமராசர்