வாழை இலை

வாழை இலை என்பது வாழை மரத்தின் இலையாகும். இது உணவு பரிமாறும் தட்டாகவும், அலங்காரப் பொருளாகவும், படையல் விரிப்பாகவும் மற்றும் சமையலிலும் பயன்படுகிறது. இந்து மற்றும் புத்த சமய பழக்கங்களில் அலங்காரப்பொருளாக பண்டிகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் உணவு கொள்ளும் தட்டாக பயன்படுகிறது.

வாழை இலையில் பூசை செய்யப்பட்ட பிரசாதம்

சமையல் தொகு

உணவு பரிமாறப்பட்டுள்ள வாழை இலை

வாழை இலையின் நீர் உறியாதன்மையாலும், வசதியாகயிருப்பதாலும் தென்னிந்தியா, பிலிப்பீன்சு, கம்போடியா உணவு வகைகள் பெரும்பாலும் இவ்விலையிலேயே பரிமாறப்படுகிறது. தமிழ் நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் முக்கிய விழாக்காலங்களில் வாழையிலையில் மட்டுமே உணவு பரிமாறப்படுகிறது.உணவின் மணத்தை அதிகரிக்க வாழை இலை பயன்படுகிறது. பதார்த்தங்களுடன் வேகவைப்பதால் மெல்லிய சுவை கொடுக்கிறது. மேலும் உணவை மடித்துக் கட்டவும் பயன்படுகிறது. இலையில் உள்ள இயற்கை சாறு உணவை பாதுகாத்து சுவையையும் கூட்டுகிறது.[1] தமிழ் நாட்டில் இவ்விலையைக் காயவைத்தும் பயன்படுத்துகின்றனர். வாழைச் சருகு என்ற பெயரில் காய்ந்த இலைகள் உணவுக்கிண்ணங்களாக பயன்படுகின்றன. வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உணவு வகைகளிலும் வாழை இலை கொண்டு பொட்டலம் போடப்படுகிறது.

புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளில், வாழை இலையும் தோல் தாளும் பேஸ்ட்லஸ்களை (pasteles) உறையிடப் பயன்படுகின்றன. பச்சை வாழைப் பழமும், இறைச்சியும், வாழை இலையுடன் சேர்த்து வேகவைக்கப்பட்டு உணவின் சுவை கூட்டப்படுகிறது.

மெக்சிகோ மற்றும் வஃகாக்காவின் தமாள் மற்றும் ஆட்டுக் கறி அல்லது பார்பகோ தாக்கோ போன்ற உணவுவகைகள் வாழை இலையுடன் வேகவைக்கப்படுகிறது. ஹவாய் நாட்டினரும் வாழை இலையுடன் சமையல் செய்கின்றனர்.

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Banana". Hortpurdue.edu. பார்க்கப்பட்ட நாள் 2009-04-16.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=வாழை_இலை&oldid=3856486" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதேம்பாவணிசிறப்பு:Searchதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்முத்தொள்ளாயிரம்அண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குதமிழ்நிர்மலா சீதாராமன்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைவரலாறுதிருக்குறள்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாவேந்தர் பாரதிதாசன் விருதுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்பதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புலோ. முருகன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐஞ்சிறு காப்பியங்கள்தக்கன்ஒப்பிலக்கியம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பெண் தமிழ்ப் பெயர்கள்மரபுச்சொற்கள்திருவள்ளுவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தனிமங்களின் எண் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவை