ரம்பா

இந்திய நடிகை

ரம்பா (பிறப்பு: சூன் 5, 1974) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார்.

ரம்பா

இயற் பெயர்விசயலட்சுமி
பிறப்புசூன் 5, 1974 (1974-06-05) (அகவை 50)
இந்தியா விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
குறிப்பிடத்தக்க படங்கள்உள்ளத்தை அள்ளித்தா

அவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார்.

திரைப்படங்கள்

தொகு
ஆண்டுதிரைப்படங்கள்கதாப்பாத்திரங்கள்குறிப்பு
1993உழவன்
1996உள்ளத்தை அளித்தாஇந்து
1996சுந்தர புருஷன்வள்ளி
1996சிவசக்தி (திரைப்படம்)பிரியா
1996செங்கோட்டையமுனா
1997தர்ம சக்கரம்
1997அடிமைச் சங்கிலி
1997வி.ஐ.பிஇந்து
1997அருணாச்சலம் (திரைப்படம்)நந்தினி
1997ராசி (திரைப்படம்)மீனா
1997ஜானகிராமன்காயத்ரி
1998காதலர் தினம் (திரைப்படம்)
1998நினைத்தேன் வந்தாய்சப்னா
1998காதலா காதலாஜானகி
1999உனக்காக எல்லாம் உனக்காகஇந்து
1999உன்னருகே நான் இருந்தால்ரம்பா
1999பூமகள் ஊர்வலம்கவிதா
1999மின்சாரக் கண்ணாபிரியா
1999சுயம்வரம் (1999 திரைப்படம்)ஊர்வசி
1999என்றென்றும் காதல்மீனு
2000குங்குமப்பொட்டுக்கவுண்டர் (திரைப்படம்)அலமேலு கந்தசாமி
2000அன்புடன்
2000சுதந்திரம் (2000 திரைப்படம்)திவ்யா
2001அழகான நாட்கள்இந்து
2001ஆனந்தம் (திரைப்படம்)ரேனுகா மாதவன்
2003திரீ ரோசஸ் (திரைப்படம்)சாரு
2003பந்தா பரமசிவன்மஞ்சு
2004சத்திரபதி
2004அழகிய தீயே
2005சுக்ரன்
2009கிவிக் கன் முருகன்மேங்கோ டோலி
2010ஒரு காதலன் ஒரு காதலி
2010பெண் சிங்கம்மைதிலி

வாழ்க்கைக் குறிப்புகள்

தொகு

ரம்பா நடித்த முதல் படம் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற தெலுங்குப் படமாகும்.

மலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். அதே ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான மற்றொருத் திரைப்படம் சம்பகுளம் தச்சன் ஆகும்.

தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது. அவருடைய ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைதனர்.

ரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து திரீ ரோசஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தார். அத்திரைப்படத்தில் ரம்பாவுடன் இணைந்து ஜோதிகா மற்றும் லைலா ஆகியோர் நடித்தனர்.

ரம்பா நடித்த குயிக் கன் முருகன் என்ற திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பல்மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் அவர் நடித்த மேங்கோ டாலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார்.

தற்பொழுது கனடா நாட்டைச் சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ரம்பா&oldid=4014715" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்வார்ப்புரு:Ntsசிவபெருமானின் பெயர் பட்டியல்சிறப்பு:Searchசிவனின் தமிழ்ப் பெயர்கள்முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிமெத்தனால்காமராசர்பாரதிதாசன்தமிழ்மீன் வகைகள் பட்டியல்பாண்டியர் துறைமுகங்கள்கண்ணதாசன்வெள்ளி (கோள்)திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்திருக்குறள்வார்ப்புரு:Refnதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்எட்டுத்தொகைஐம்பூதங்கள்அறிவியல் தமிழ்பெண் தமிழ்ப் பெயர்கள்பூலான் தேவிசிறப்பு:RecentChangesகியூ 4 இயக்கு தளம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வார்ப்புரு:·பதினெண் கீழ்க்கணக்குகடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் நாட்டுப்புறக் கதைகள்இசைக்கருவிவார்ப்புரு:Ntshதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்