மெர்சல் (திரைப்படம்)

அட்லீ இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மெர்சல் (Mersal) 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். பாக்ஸ்ஆபிஸில் 200 கோடி வசூல் செய்த படம் என விளம்பரம் செய்யப்பட்டது.[1]

மெர்சல்
இயக்கம்அட்லீ
தயாரிப்புஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
கதைஅட்லீ
இசைஏ.ஆர்.ரகுமான்
நடிப்புவிஜய்
காஜல் அகர்வால்
எஸ். ஜே. சூர்யா
வடிவேலு
சமந்தா
நித்யா மேனன்
கோவை சரளா
ராஜேந்திரன்
ஒளிப்பதிவுவிஷ்ணு
படத்தொகுப்புஆண்டனி எல். ரூபன்
வெளியீடுஅக்டோபர் 18, 2017 (2017-10-18)
ஓட்டம்169 min
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு₹120 கோடி
மொத்த வருவாய்₹235கோடி

நடிகர்கள்

தொகு

கதை

தொகு

இத்திரைப்படத்தில் வெற்றிமாறன் என்ற பெயருடன் கிராமத்தில் வாழும் வீரமான வாலிபராக விஜய் நடித்துள்ளார். இவரை ஊர் மக்கள் தளபதி என செல்லமாக அழைக்கின்றனர். இந்தக் கதாபாத்திரம் கோயில் ஒன்றைக் கட்ட முயற்சிக்கும் போது திருவிழாவில் ஏற்படும் தீ விபத்தில் குழந்தைகள் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஒரு ஊருக்கு கோயிலை விட மருத்துவமனை அவசியம் என்று கருதி ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் மருத்துவமனை ஒன்றை கட்டுகிறார். இந்த மருத்துவமனையில் பணியாற்ற வரும் மருத்துவராக எஸ். ஜே. சூர்யா, டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு காலகட்டத்தில் மருத்துவமனையை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டு மருத்துவத்தைப் பணம் ஈட்டும் தொழிலாக மாற்றும் முயற்சியை மேற்கொள்கிறார். தளபதியின் மனைவியாக வரும் (நித்யா மேனன்) ஐஸ்வர்யா தனது இரண்டாவது பிரசவத்திற்காக அந்த மருத்துவமனையில் சேர்கிறார். டேனியல் சுகப்பிரசவத்திற்குப் பதிலாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்கும் முயற்சியில் மருத்துவப் பிழை காரணமாக தாயின் உயிர் பறிக்கப்படுகிறது. மருத்துவமனை தடம் மாறிப்போவதை இறக்கும் தருவாயில் தளபதியிடம் ஐஸ்வர்யா சொல்ல, கோபம் கொண்ட தளபதி டேனியலைத் தேடிச் செல்லும் போது, டேனியலின் சூழ்ச்சி மிக்க தாக்குதலால் தளபதி கொல்லப்படுகிறார். தளபதியின் முதல் குழந்தை மற்றும் தற்போதைய பிரசவத்தில் பிறந்த குழந்தை இருவரும் உயிர் பிழைத்தனரா? டேனியல் எவ்வாறு பழிவாங்கப்பட்டார்? என்பதை தற்போதைய மருத்துவ உலகின் சீரழிவுகளுடன் இணைத்து மீதமுள்ள திரைக்கதை சொல்கிறது.[2][3]

பாடல்கள்

தொகு

அனைத்து பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

எண்.பாடல்பாடகர்கள்நீளம்
1."ஆளப்போறான் தமிழன்"கைலாஷ் கெர், டி. சத்யபிரகாஷ், தீபக் ப்ளூ, பூஜா வைத்தியநாத்5:48
2."நீதானே"ஸ்ரேயா கோஷல், ஏ.ஆர்.ரஹ்மான்4:29
3."மாச்சோ"சித் ஸ்ரீராம், ஸ்வேதா மோகன்4:35
4."மெர்சல் அரசன்"ஜி.வி.  பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர், சரண்யா ஸ்ரீனிவாஸ், டி.ஜி. விஸ்வபிரசாத்4:16

தயாரிப்பு

தொகு

ராம.நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. முதல் முறையாக மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "ஒரு வாரதில் ரூ.10 லட்சம்; 'மெர்சல்' படு தொல்வி!". News tm. 25 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "மெர்சல் - விமர்சனம்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2017.
  3. "திரை விமர்சனம்: மெர்சல்". இந்து டாக்கீஸ் குழு. தி இந்து. 20 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2017.

வெளியிணைப்பு

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மெர்சல்_(திரைப்படம்)&oldid=3744579" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: