முகப்பியம்

முகப்பியம் (Facadism) என்பது, கட்டிடம் ஒன்றின் முகப்பு கட்டிடத்தின் பிற பகுதிகளில் இருந்து தனித்து இருக்கும் வகையில் வடிவமைக்கும் அல்லது கட்டும் கட்டிடக்கலை அல்லது கட்டுமான நடைமுறையைக் குறிக்கும். பெரும்பாலும் மரபுரிமைப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் கீழ், கட்டிடத்தின் முகப்பைப் பாதுகாத்துக்கொண்டு அதன் பின்னால் புதிய கட்டிடத்தைக் கட்டும் முறை பின்பற்றப்படுகிறது.

முகப்பியத்துக்கான தொடக்ககால எடுத்துக்காட்டு. பழைய கட்டிடம் ஒன்றின் முகப்பு புதிய கட்டிடம் ஒன்றின் முகப்பாகப் பயன்படுகின்றது.

கட்டிட முகப்புக்களைப் பாதுகாப்பதற்குப் பல வரலாற்று, அழகியல் காரணங்கள் உள்ளன. கட்டிடங்களின் உட்புறங்கள் தீப்பிடித்தல் போன்ற அழிவுகளுக்கு உள்ளாகிப் பயன்படுத்தப்பட முடியாத நிலை ஏற்படும்போது, முகப்பைப் பாதுகாப்பதற்கு முகப்பிய நடைமுறையைச் சிலர் பயன்படுத்துகின்றனர். வணிக நோக்கத்துக்காகக் கட்டிடங்களைக் கட்டி விற்பவர்கள், வரலாற்று அல்லது அழகியல் முக்கியத்துவம் உள்ள கட்டிடங்களுக்குப் பதிலாகப் புதிய கட்டிடங்களைக் கட்ட முயலும்போது, மரபுரிமைப் பாதுகாப்பாளர்களுடன் இணக்கத்துக்கு வருவதற்காக இந்த நடைமுறையைக் கைக்கொள்வது உண்டு.

கட்டிடங்களைப் புதுப்பித்தல், தகவமை மீள்பயன்பாடு, மீள்கட்டுமானம், முகப்பியம் போன்றவற்றுக்கு இடையே தெளிவற்ற எல்லைகள் இருப்பதுண்டு. சிலவேளைகளில் கட்டிடங்களைப் புதுப்பிக்கும் போர்வையில் வெளிச்சுவர்கள் தவிர்ந்த எல்லாப் பகுதிகளையும் அகற்றிவிட்டு மீளக்கட்டுவர். இது முகப்பியத்துக்குச் சமம். வெளிச்சுவர், கூரை, தளங்கள் ஆகியவற்றை அப்படியே வைத்துக்கொண்டு செய்யும் புதுப்பித்தல்களும், திருத்த வேலைகளும் பழைய கட்டிடத்துடனான இணைப்பைப் பெருமளவுக்குப் பேணும் வகையில் அமைகின்றன. இதற்கு முரணாக, சாலை முகப்புகளாக அமையக்கூடிய ஒன்றோ இரண்டோ முகப்புச் சுவர்களை மட்டும் அழகியல் மற்றும் அலங்காரக் காரணங்களுக்காக விட்டுவைப்பது முகப்பியத்தின் வழமையான நடைமுறை.[1]

இது பெருமளவு சர்ச்சைக்கு உரியதாகவும், பல மரபுரிமைப் பாதுகாப்பாளர்களால் விரும்பப்படாததாகவும் இருந்தும், சமுதாயத்தில் பலர் பழமையைப் பாதுகாக்க விரும்புவதால் முகப்பியம் பயன்பாட்டில் இருந்துவருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Jonathan Richards (12 November 2012). Facadism. Routledge. pp. 7–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-88952-5.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=முகப்பியம்&oldid=2178972" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதேம்பாவணிசிறப்பு:Searchதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்முத்தொள்ளாயிரம்அண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குதமிழ்நிர்மலா சீதாராமன்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைவரலாறுதிருக்குறள்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாவேந்தர் பாரதிதாசன் விருதுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்பதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புலோ. முருகன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐஞ்சிறு காப்பியங்கள்தக்கன்ஒப்பிலக்கியம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பெண் தமிழ்ப் பெயர்கள்மரபுச்சொற்கள்திருவள்ளுவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தனிமங்களின் எண் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவை