பொன்னேர் உழுதல்

பொன்னேர் உழுதல் (Royal Ploughing Ceremony) என்பது பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.[1]இது சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்துவருவதை அகநானூற்று பாடல்கள் வாயிலாக அறியலாம்.[2] இதை இளங்கோவடிகள் ஏர்மங்கலம் எனக் குறிப்பிடுகிறார்.[3] முதன் முதலாக ஒரு நிலப்பகுதியில் நல்ல நாளில் ஏர் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னேர் பூட்டல் என்பர். கொங்கதேச வேளிர் தலைவர்களாலும், தாய்லாந்து, கம்போடிய, இலங்கை , பர்மிய மன்னர்களாலும் இன்றளவும் நடத்தப்பெருகிறது.[4]

பர்மாவில் போன்னேர் விழாவை சித்தரிக்கும் 20 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஓவியம்

தற்காலத்தில் தமிழ்நாட்டின் கிராமங்களில் இந்த விழாவானது சித்திரை மாதத்தில் நடத்தப்படுகிறது. இந்த நாளில் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் மாடுகளை ஏரில் பூட்டி ஊர் பொது இடத்தில் வரிசையாக அணிவகுத்து உழுது பூசைசெய்து வழிபடும் வழக்கம் உள்ளது.

இன்கா நாகரிகம்

தொகு

இன்கா வேளாண்மை முறையிலும் மன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது தொடங்கி வைப்பார். அங்கேயும் அவர் பொன்னாலான கலப்பையையே பயன்படுத்துவார்.[5]

மகதம்

தொகு

பண்டை மகதநாட்டு ஊர்களில் ஆண்டுதோறும் முதலுழவு உழும்போது, ஊர்த்தலைவன் பொன்னாற் செய்த ஏரைப் பூட்டி உழவர் வரிசையில் முதலில் நின்று, பிறர் பின்வர, ஒரு படைச்சாலோட்டித் தொடங்கிவைப்பான் என்று சொல்லப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலியின் இணையப்பக்கம்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்
    தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்; - அகம் - 1

    பொன்னேர் பசலை பாவின்று மன்னே! அகம் - 172

    பொன்னேர் பசலை ஊர்தரப், பொறிவரி
    நல்மா மேனி தொலைதல் நோக்கி, அகம் - 229
  3. http://www.tamilvu.org/courses/degree/p103/p1033/html/p103325.htm
  4. https://www.how.com.vn/wiki/en/Royal_Ploughing_Ceremony
  5. நாகரிக வரலாறு (பண்டைக் காலம்), டாக்டர்.ஏ.சுவாமிநாதன், ராகவேந்திரா அச்சகம், reference book for TNPSC group 1 & M.A. History
  6. தமிழர் வரலாறு-1, பாவாணர்

மேலும் பார்க்க

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=பொன்னேர்_உழுதல்&oldid=3854991" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்விஜய் (நடிகர்)சுப்பிரமணிய பாரதிகாமராசர்திவ்யா துரைசாமிபாரதிதாசன்சூழலியல்சிறப்பு:RecentChangesபெண் தமிழ்ப் பெயர்கள்சிலப்பதிகாரம்கண்ணதாசன்கள்ளக்குறிச்சிதிருக்குறள்அறிவியல் தமிழ்இயற்கை வளம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எத்தனால்ஐம்பெருங் காப்பியங்கள்வேளாண்காடு வளர்ப்புமனித உரிமைஎட்டுத்தொகைகியூ 4 இயக்கு தளம்சுற்றுச்சூழல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்நாடுபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஜெயம் ரவிசுற்றுச்சூழல் பிரமிடுசாராயம்வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972வேளாண்மைபாலைவனமாதல்விநாயகர் அகவல்அறுபடைவீடுகள்