நடுநிலைப் பள்ளி

இடைநிலைப் பள்ளி (middle school) இளையோர் உயர்நிலைப் பள்ளி, இளையோர் மேல்நிலைப் பள்ளி அல்லது கீழ்நிலைப் பள்ளி என்பது, தொடக்கப் பள்ளிக்கும் மேல்நிலைப் பள்ளிக்கும் இடையிலான கல்வி நிலையாகும்.

ஆப்கானித்தான் தொகு

ஆப்கானித்தானில், நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை உள்ளன, இதில் 11 முதல் 14 வயது வரையிலான மாணவர்கள் பயில்கின்றனர்.

அல்சீரியா தொகு

அல்சீரியாவில், ஒரு நடுநிலைப் பள்ளி 4 தரங்களைக் கொண்டுள்ளது: 6 முதல் 9 வகுப்பு வரை உள்ளது. 11-14 வயதுடைய மாணவர்களைக் கொண்டுள்ளது.

ஆத்திரேலியா தொகு

ஆத்திரேலியாவின் எந்தப் பகுதியிலும் தனியாக நடுநிலைப் பள்ளிகள் என்பது இல்லை. மாணவர்கள் நேரடியாக ஆரம்பப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளிக்குச் (வருடங்கள் 7-12, பொதுவாக உயர்நிலைப் பள்ளி என்று குறிப்பிடப்படுகிறது) செல்கின்றனர்.[1]

ஆஸ்திரேலியாவில் நிறுவப்பட்ட முதல் நடுநிலைப் பள்ளி ஆர்மிடேலில் உள்ள ஆர்மிடேல் பள்ளியாகும்.[2]

இந்தியா தொகு

இந்தியாவில், நடுநிலைப் பள்ளி 6 முதல் 8 வகுப்புகளைக் கொண்டதாகும்.[3] ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மாநிலக் கல்வி வாரியம் உள்ளது. ஒவ்வொன்றும் அதன் சொந்தத் தரநிலைகளைக் கொண்டுள்ளன, அவை மத்திய வாரியங்களிலிருந்து வேறுபட்டிருக்கலாம்.[3] சில கல்வி நிறுவனங்களில், 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வி வழங்குவது இடைநிலைப் பள்ளி என்று அழைக்கப்படுகிறது.[3]

இந்தியாவின் கல்வி நிலைகள்:

  • மழலைக் கல்வி- நர்சரி முதல் கே.ஜி
  • துவக்கப்பள்ளி - வகுப்புகள் I முதல் V
  • நடுநிலைப் பள்ளி - வகுப்புகள் VI முதல் VIII வரை
  • உயர்நிலைப் பள்ளி - ஒன்பதாம் முதல் பத்தாம் வகுப்புகள்
  • மேல்நிலைப் பள்ளி- XI முதல் XII வகுப்புகள்

மேற்கோள்கள் தொகு

  1. "Shake-up puts Year 7s in high school". WA Today. 8 December 2011.
  2. "A SHORT HISTORY of THE ARMIDALE SCHOOL" (PDF). The Armidale School. Archived from the original (PDF) on 2013-04-08. பார்க்கப்பட்ட நாள் 2014-01-16.
  3. 3.0 3.1 3.2 Amaidi. "Indian Education System" (PDF). Archived from the original (PDF) on 17 June 2012. பார்க்கப்பட்ட நாள் 5 May 2012.

வெளி இணைப்புகள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=நடுநிலைப்_பள்ளி&oldid=3958736" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குசுப்பிரமணிய பாரதிதமிழர் நிலத்திணைகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருக்குறள்பாரதிதாசன்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்பவன் கல்யாண்பிள்ளைத்தமிழ்சிலப்பதிகாரம்கம்பராமாயணம்அகநானூறுபத்துப்பாட்டுநற்றிணை2024 இந்தியப் பொதுத் தேர்தல்மரபுச்சொற்கள்கம்பர்பதினெண்மேற்கணக்குஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்குறுந்தொகைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்புறநானூறுதாயுமானவர்குற்றியலுகரம்தமிழ் இலக்கணம்தமிழ்நாடுஈ. வெ. இராமசாமிதிருவள்ளுவர்ஐஞ்சிறு காப்பியங்கள்ஐங்குறுநூறுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இராமோசி ராவ்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தொல்காப்பியம்