தேனிரும்பு

குறைந்த கார்பன் அளவு கொண்ட இரும்பு

தேனிரும்பு (Wrought iron) எஃகை விட குறைந்த கரி சேர்ந்த இரும்பு கலவை மாழை ஆகும். தேனிரும்பைத் தயாரிக்கையில் நார்த்தன்மையுடைய கசடுகள் அதில் சிக்குண்டு உள்ளதே இதன் சிறப்பியல்பாகும். இதனால் தேனிரும்பை பொறிக்கும் போதும் உடைக்குமளவில் வளைக்கும்போதும் மரத்தைப் போன்றே "வரிகள்" உடன் காணப்படுகிறது. இது வலு மிக்கதாகவும், தகடாக்கத் தக்கதாகவம் நீட்டக் கூடியதாகவும் எளிதாக பற்ற வைக்கக் கூடியதாகவும் உள்ளது. வரலாற்றில், இதுவே மிகவும் தூய்மையான இரும்பாக "நல்லிரும்பு" என அறியப்பட்டது;[1][2] இருப்பினும், தற்போதைய சீர்தரங்கள் கரிமச் சேர்க்கை 0.008 wt%க்கும் கீழாக இருக்க வரையறுப்பதால் இதனை தூய இரும்பாகக் கொள்ள இயலாது.[3][4]

பாரிசிலுள்ள ஈஃபெல் கோபுரம் தேனிரும்பின் ஒரு வகையான துழாவுலை இரும்பினால் கட்டப்பட்டது
தில்லியிலுள்ள இரும்புத் தூண் 98% தேனிரும்பினால் ஆனது

இரும்புத் தயாரிக்கும் முறைகள் மேம்படுத்தும் முன்னர் தேனிரும்பே மிகவும் வழக்கத்திலிருந்த தகடாக்கக்கூடிய இரும்பாக இருந்தது. தேனிரும்பிலிருந்தே வாள்கள், உணவுக் கத்திகள், உளிகள், கோடாரிகள் மற்றும் பிற கூர்மையான கருவிகளைத் தயாரிக்கத் தேவையான எஃகு பெறப்பட்டது. போர்க்கப்பல்களிலும் தொடர்வண்டிகளிலும் பயன்படுத்தப்பட்டதால் இதன் தேவை 1860களில் உச்சத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து விட்டது.

தேனிரும்பைக் கொண்டு தறையாணிகள், ஆணிகள், கம்பிகள், சங்கிலிகள், தண்டவாளங்கள், தொடர்வண்டி பெட்டியிணைப்புகள், நீர் மற்றும் நாராவிக் குழாய்கள், மரையாணிகள், திருகாணிகள், குதிரை இலாடங்கள், கைப்பிடிகள், அலங்கார அறைகலன்கள் ஆகியன தயாரிக்கப்பட்டன.[5]

தற்போது வணிகரீதியாக தேனிரும்பு தயாரிக்கப்படுவதில்லை. தேனிரும்பால் தயாரிக்கப்பட்டவையாக கூறப்படும் காப்பு சட்டங்கள், பூங்கா நாற்காலிகள் [6] மற்றும் இரும்புக் கதவுகள் மென் உருக்கால் தயாரிக்கப்படுகின்றன.[7] இருப்பினும் அவை கை வேலைபாடுகளுடன் இருப்பதால் ஆங்கிலத்தில் ராட் (வேலை செய்த) அயர்ன் என்றே அழைக்கப்படுகின்றன.[8]

மேற்கோள்கள் தொகு

  1. Imhoff, Wallace G. (1917), "Puddle Cinder as a Blast Furnace Iron Ore", Journal of the Clevelp[oihougohohpjand Engineering Society, 9 (621.76): 332.
  2. Scoffern, John (1869), The useful metals and their alloys (5th ed.), Houlston & Wright, p. 6.
  3. McArthur, Hugh; Spalding, Duncan (2004), Engineering materials science: properties, uses, degradation and remediation, Horwood Publishing, p. 338, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-898563-11-2.
  4. Campbell, Flake C. (2008), Elements of Metallurgy and Engineering Alloys, ASM International, p. 154, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87170-867-0.
  5. Gordon, Robert B (1996), American Iron 1607-1900, Baltimore and London: Johns Hopkins University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-6816-5 {{citation}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  6. "Wrought Iron: A Patio Furniture dream". cnet reviews இம் மூலத்தில் இருந்து 2010-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100123062138/http://www.patioset.com/Wrought_Iron_Patio_Sets/. பார்த்த நாள்: 2009-09-29. 
  7. Daniel, Todd (May 3, 1997), Clearing the Confusion Over Wrought Iron, archived from the original on 2012-07-18, பார்க்கப்பட்ட நாள் 2008-01-05
  8. Daniel, Todd (May 3, 1997), Clearing the Confusion Over Wrought Iron, http://www.artmetal.com/project/NOMMA/WROUGHT.HTM பரணிடப்பட்டது 2012-07-18 at Archive.today, retrieved 2008-01-05

வெளி இணைப்புகள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=தேனிரும்பு&oldid=3791664" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: 2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024அண்ணாமலை குப்புசாமிஇந்திய மக்களவைத் தொகுதிகள்முதற் பக்கம்சிறப்பு:Searchதமிழச்சி தங்கப்பாண்டியன்இந்திய நாடாளுமன்றம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019மக்களவை (இந்தியா)இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிதமிழக மக்களவைத் தொகுதிகள்நாம் தமிழர் கட்சிஇந்தியப் பிரதமர்2019 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தேசிய ஜனநாயகக் கூட்டணிபாரதிய ஜனதா கட்சிநா. சந்திரபாபு நாயுடுதருமபுரி மக்களவைத் தொகுதிநரேந்திர மோதிஐக்கிய ஜனதா தளம்விருதுநகர் மக்களவைத் தொகுதிநிதிஷ் குமார்வினோஜ் பி. செல்வம்தெலுங்கு தேசம் கட்சிசுப்பிரமணிய பாரதிதமிழ்பி. காளியம்மாள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பள்ளிக்கூடம்தமிழ்நாடுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இந்திய தேசிய காங்கிரசுதிராவிட முன்னேற்றக் கழகம்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குதொல். திருமாவளவன்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி