சோஃபியா கோவலெவ்சுகாயா

சோஃபியா வாசிலியேவ்னா கோவலெவ்சுகாயா (Sofia Vasilyevna Kovalevskaya, உருசியம்: Со́фья Васи́льевна Ковале́вская, 15 சனவரி [யூ.நா. 3 சனவரி] 1850 – 10 பிப்ரவரி [யூ.நா. 29 சனவரி] 1891) ஒரு முதல் பேராளுமை வாய்ந்த பெண் கணிதவியலாளர் ஆவார். இவர் கணிதப் பகுப்பாய்விலும் வகைநுண் கலனத்திலும் இயக்கவியலிலும் மூலமுதல் பங்களிப்புகளைச் செலுத்தியுள்ளார். இவர்தான் வட ஐரோப்பாவில் முதன்முதலாகப் பேராசிரியரான பெண் ஆவார். ஓர் அறிவியல் இதழில் முதல் பெண் பதிப்பாசிரியராக விளங்கியவரும் இவரே.[1]

சோஃபியா கோவலெவ்சுகாயா
Sofia Kovalevskaya
1880 இல் சோஃபியா கோவலவ்சுகாயா
பிறப்பு(1850-01-15)15 சனவரி 1850
மாஸ்கோ, உருசியப் பேரரசு
இறப்பு10 பெப்ரவரி 1891(1891-02-10) (அகவை 41)
சுட்டாக்கோல்ம், சுவீடன்
துறைகணிதவியல்
பணியிடங்கள்சுட்டாக்கோல்ம் பல்கலைக்கழகம்
உருசிய அறிவியல் கல்விக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கோட்டிங்கன் பல்கலைக்கழகம் (PhD; 1874)
ஆய்வு நெறியாளர்கார்ள் வியெர்சுடிராசு
அறியப்படுவதுகாஷி-கோவலெவ்சுகி தேற்றம்

அவரது உருசியப் பெயர் பலவகைகளில் உரோம மயப்படுத்தப்படுவது உண்டு. என்றாலும் அவர் தம்மை எப்போதும் "சோஃபீ கோவலவ்சுகி" எனக் கூறிக்கொள்வார். கல்விப்பணி வெளியீடுகளில் மட்டும் (அவ்வப்போது "கோவலவ்சுகி"), எனவும் மாற்றிக்கொள்வார்.. சுவீடன் வந்ததும் தம்மைச் "சோனியா" என அழைத்துக்கொண்டார்.

பாராட்டுகள் தொகு

நினைவு நாணயம், 2000.
கோவியத் யூனியன் அஞ்சல் தலை, 1951.

சோனியா கோவலவ்சுகி உயர்நிலைப் பள்ளிக் கணித நாள் என்பது மகளிர் கணிதவியல் கழகம் நடத்தும் புது உருவாக்கத் திட்டமாகும். இது அமெரிக்காவில் நாடெங்கும் பணிப்பட்டறைகளை நடத்தி மகள்ரைக் கணித ஆய்வில் ஆர்வமூட்டுகிறது.

சோனியா கோவலவ்சுகி விரிவுரை என்ற நிகழ்ச்சியை AWM ஒவ்வோராண்டும் நடத்துகிறது இதில் பயன்முறை, கணிப்பியல் கணிதவியலில் பங்காற்றிய பேராளுமைகளைப் பற்றிய உரைகள் ஆற்றப்படுகின்றன. முன்பு இந்நிகழ்ச்சியில் உரையாற்றிப் பெயர்பெற்றவர்களீல் இரீன் பொன்சேகா (2006), இங்கிரிடு டௌபெச்சீசு (2005), ஜாய்சு ஆர்.மெக்லௌலின் (2004), இலிண்டா ஆர். பெட்சோல்டு (2003) ஆகியோர் அடங்குவர்.

நிலாவின் குழிப்பள்ளம் ஒன்று கோவலவ்சுகாயா குழிப்பள்ளம் என வழங்கப்படுகிறது.

செருமனியின் அலெக்சாந்தர் வான் ஃஅம்போல்ட் நிறுவனம் ஈராண்டுக்கொருமுறை ’சோபியா கோவலவ்சுகி விருதை’ இளம் ஆய்வாளர்களுக்குத் தருகிறது.

திரைப்படத்தில் தொகு

மூன்று திரைப்படத்திலும் தொலைக்காட்சி வாழ்க்கைத் தொடர்களிலும் சோஃபியா படப்பொருளாக அமைந்துள்ளார்.

  • சோஃபியா கோவலவ்சுகாயா (1956), இயக்கம்: உலோசஃப் சபிரோ, நடிப்பு:யெலெனா யுங்கர், இலெவ் கொசலோவ், தாத்தியானா செழென்யெவ்சுகாயா.[2]
  • Berget På Månens Baksida ("இருண்ட நிலாப்பக்க மலை"), (1983), இயக்கம்: இலென்னார்ட் ஃசுல்சுடிரோம், நடிப்பு: சோஃபியாவாக குனில்லா நிரூசு, ஆன் சார்லெட் எட்கிரென் இலெஃப்லெராக பிபி ஆண்டர்சன், கஜனெல்லோ டச்சுக்காரி, கோசுட்டா மிட்டாகு இலெஃப்லெரின் தங்கை ஆகியோர்.[3]
  • சோஃபியா கோவலவ்சுகாயா (1985 TV),இயக்கம்: அசெர்பைசானி இயக்குநர் அயான் சக்மாலியேவா, நடிப்பு: யெலெனா சொஃபோனோவா, சோஃபியாவாக .[4]

புனைவிலக்கியத்தில் தொகு

  • "Little Sparrow: சோஃபியா கோவலவ்சுகியின் வாழ்க்கைச் சித்திரம்" (1983), Don H. Kennedy, Ohio University Press, Athens, Ohio
  • "Beyond the Limit: The Dream of Sofya Kovalevskaya" (2002), இது சோஃபியாவின் வாழ்க்கை வரலாற்றுப் புதினமாகும். இதை யோன் சுபிசி எனும் கணிதக்கல்வியாளரால் புனையப்பட்டது. வெளியீடு: Tom Doherty Associates, LLC, இது அவரது மணவாழ்க்கையையும் கல்வி ஈடுபாட்டையும் வரலாற்றியலாக படைக்கிறது. இது புதின ஆசிரியர் உருசிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சோஃபியாவின் கடிதங்கள்ளால் உருவாகியது.
  • Against the Day, 2006 புதினம், தாமசு பிஞ்சன் இது சோஃபியாவின் வாழ்க்கையைப் பற்றி எழுத தீட்டமிடப்பட்ட்து, ஆனால் முடிவுற்ற புதினத்தில் அவர் சிறுபாத்திரமாக வருகிறார்.
  • "கழிபேருவகை" (2009), சிறுகதை, அலைசு மன்றோ,ஆகத்து 2009 , Harper's Magazine இதில் சோஃபியா முதன்மைப் பாத்திரமாக வருகிறார். இது பிறகு வெளியிடப்பட்ட எனும் திரட்டிலும் வெளியானது.

தேர்ந்தெடுத்த வெளியீடுகள் தொகு

  • Kowalevski, Sophie (1875), "Zur Theorie der partiellen Differentialgleichung", Journal für die reine und angewandte Mathematik, 80: 1–32[தொடர்பிழந்த இணைப்பு] (The surname given in the paper is "von Kowalevsky".)
  • Kowalevski, Sophie (1884), "Über die Reduction einer bestimmten Klasse Abel'scher Integrale 3ten Ranges auf elliptische Integrale", Acta Mathematica, 4 (1): 393–414, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/BF02418424
  • Kowalevski, Sophie (1885), "Über die Brechung des Lichtes In Cristallinischen Mitteln", Acta Mathematica, 6 (1): 249–304, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/BF02400418
  • Kowalevski, Sophie (1889), "Sur le probleme de la rotation d'un corps solide autour d'un point fixe", Acta Mathematica, 12 (1): 177–232, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/BF02592182
  • Kowalevski, Sophie (1890), "Sur une propriété du système d'équations différentielles qui définit la rotation d'un corps solide autour d'un point fixe", Acta Mathematica, 14 (1): 81–93, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/BF02413316
  • Kowalevski, Sophie (1891), "Sur un théorème de M. Bruns", Acta Mathematica, 15 (1): 45–52, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/BF02392602

புதினம் தொகு

  • இன்மைசார் இளம்பெண், மேரி சிரீனும் நடாஷா கோல்செவ்சுகாயாவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது; அறிமுகம்: நடாஷா கோல்செவ்சுகாயா. அமெரிக்க புத்தியல் மொழிக்கழகம் (2001) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87352-790-9

மேற்கோள்கள் தொகு

மேலும் படிக்க தொகு

  • Ann Hibner Koblitz: A Convergence of Lives: Sofia Kovalevskaia -- Scientist, Writer, Revolutionary (Rutgers University Press, 1983)
  • A. H. Koblitz, Sofia Vasilevna Kovalevskaia in Louise S. Grinstein (Editor), Paul J. Campbell (Editor) (1987), Women of Mathematics: A Bio-Bibliographic Sourcebook, Greenwood Press, New York, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-24849-8 {{citation}}: |author= has generic name (help)
  • Roger Cooke, The Mathematics of Sonya Kovalevskaya (Springer-Verlag, 1984)

வெளி இணைப்புகள் தொகு

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்முள்ளிவாய்க்கால் நினைவு நாள்திருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறப்பு:RecentChangesசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பதினெண் கீழ்க்கணக்குவிநாயகர் அகவல்பெண் தமிழ்ப் பெயர்கள்இந்திய அரசியலமைப்புசுசித்ராதமிழ்நாடுஎட்டுத்தொகைவேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஈ. வெ. இராமசாமிசிலப்பதிகாரம்அறுபடைவீடுகள்ஜி. வி. பிரகாஷ் குமார்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஐம்பெருங் காப்பியங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்திவ்யா துரைசாமி2024 இந்தியப் பொதுத் தேர்தல்கம்பராமாயணம்இராமலிங்க அடிகள்பிள்ளைத்தமிழ்கார்த்திக் குமார்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அம்பேத்கர்திரு. வி. கலியாணசுந்தரனார்சுற்றுலாகார்லசு புச்திமோன்