பொதுவாக, சண்டை அல்லது சமர் (battle) என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆயுதப் படைகள், அல்லது போராளிகள் மத்தியில் நடைபெறும் போர் முறை ஆகும். ஒரு சண்டையில், ஒவ்வொரு சண்டை இடுபவரும் ஓர் இராணுவத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பர், அது நாடு, மொழி, இனம், என ஏதாவது ஓர் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

போர்கள், அல்லது இராணுவத் தாக்குதல்கள் பொதுவாக போரியல் மூல உபாயம் மூலம் திட்டமிடப்படுகின்றன. ஆனால், சண்டை அல்லது சமரில் பெரும்பாலும் காயமடைவது அல்லது மரணம் அடைவது நிகழ்கிறது.

சண்டையின் பெயர்கள் தொகு

ஜிப்ரால்டர் சண்டை 1607 ஹெண்ட்ரிக் கார்னீலிசு கைவண்ணத்தில்

பொதுவாக, சண்டையில் பெயரிடுவது புவியியல் அமைப்பை சார்ந்து இருக்கும். ஒரு நகரத்தின் பெயர், காடுகள் அல்லது ஆறுகளின் பெயர் இருக்கும், "... சண்டை", என பெயரிடுவது நடைமுறையில் இருந்து வருகிறது. எப்போதாவது சண்டை நடைபெற்ற திகதி அல்லது மாதத்தினையும் பெயரில் சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது.

சண்டையின் விளைவுகள் தொகு

சண்டையில் பங்கேற்க தனிநபர்கள், லேசான உளவியல் பிரச்சனைகள் முதல் நிரந்தரமான காயங்கள் மற்றும் படுகாயம் அடையும் வாய்ப்புகளும் உண்டு. சண்டையில் உயிர் பிழைத்தவர்கள் வாழ்க்கை கொடுங் கனவுகளை கொண்டிருக்கும். அக்கனவுகள், அவர்கள் சந்தித்த சூழல், அல்லது காட்சிகள் அல்லது ஒலி அசாதாரண எதிர்விளைவுகளை பற்றியே இருக்கும். ஒரு சிலர் மனநல பாதிப்பிற்கும் ஆளாகின்றனர். அது மட்டுமின்றி, சமரில் பெரும்பாலும் காயமடைவது, ஊனமுறுவது, வடு ஏற்படுவது, உடல்ரீதியான செயல்பாடுகளை இழப்பு, கண்பார்வை மங்குதல், பக்கவாதம் அல்லது மரணம் அடைவது நிகழ்கிறது.

படங்கள் தொகு

இவற்றையும் பார்க்க தொகு

மேலும் படிக்க தொகு

  • க்ளாட்ஸ், டேவிட் எம். மற்றும் வுயூனோ, கார்ல் ஈ (1991) சோவியத் இராணுவ நடவடிக்கையின் கலை: ஆழமான போரில் நோக்கத்தில். டெய்லர் & பிரான்சிஸ். ஐஎஸ்பிஎன் 0714640778. (ஆங்கில மொழியில்)
  • கீகன், ஜான் (1976). போர் முகம். பிம்லிகோ. ஐஎஸ்பிஎன் 1844137481. (ஆங்கில மொழியில்) nangal mattum
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=சண்டை&oldid=3893969" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குசுப்பிரமணிய பாரதிதமிழர் நிலத்திணைகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருக்குறள்பாரதிதாசன்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்பவன் கல்யாண்பிள்ளைத்தமிழ்சிலப்பதிகாரம்கம்பராமாயணம்அகநானூறுபத்துப்பாட்டுநற்றிணை2024 இந்தியப் பொதுத் தேர்தல்மரபுச்சொற்கள்கம்பர்பதினெண்மேற்கணக்குஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்குறுந்தொகைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்புறநானூறுதாயுமானவர்குற்றியலுகரம்தமிழ் இலக்கணம்தமிழ்நாடுஈ. வெ. இராமசாமிதிருவள்ளுவர்ஐஞ்சிறு காப்பியங்கள்ஐங்குறுநூறுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இராமோசி ராவ்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தொல்காப்பியம்