கோண்டி மொழி

கோண்டி மொழி ஒரு முக்கியமான ஒரு நடு திராவிட மொழியாகும். நடு இந்தியாவிலுள்ள மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏறத்தாழ 2,000,000 கோண்டு மக்களால் பேசப்படுகிறது.[1] இது கோண்டு இனத்தவரின் தாய்மொழியாக இருப்பினும் இவ்வினத்தவரில் அரைப்பகுதியினரால் மட்டுமே இப்போது இம்மொழி பேசப்படுகிறது.

கோண்டி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்மத்தியப் பிரதேசம், ஆந்திரம், மஹாராஷ்டிரம், சத்தீஸ்கர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2,000,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2gon
ISO 639-3Variously:
gon — கோண்டி (பொது)
ggo — தென் கோண்டி
gno — வட கோண்டி மொழி

கோண்டி மொழிக்கு எழுதப்பட்ட இலக்கியம் கிடையாது எனினும் இது ஒரு சிறப்பான நாட்டார் இலக்கியத்தைக் கொண்டுள்ளது. திருமணப் பாடல்கள், கதை கூறுதல் என்பன இவற்றுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். இம்மொழி இரு பால் முறையைக் கொண்டது. தொடக்க ஒலிப்புடை வெடிப்பொலிகளையும் (voiced stops) (g, j, ḍ, d, b), மூச்சுடை வெடிப்பொலிகளையும் (aspirated stops) (kh, gh, jh, dh, ph) உருவாக்கியதன் மூலம் மூலத் திராவிட மொழியிலிருந்து இது விலகியுள்ளது.

பல கோண்டி மொழியின் கிளைமொழிகள் இன்னும் போதிய அளவு விளக்கப்படவோ அல்லது ஆவணப்படுத்தப்படவோ இல்லை. இதன் முக்கிய கிளைமொழிகள் டோர்லா, கோயா, மாரியா, முரியா, ராஜ் கோண்ட் என்பனவாகும். சில அடிப்படையான ஒலியியல் அம்சங்கள் வடமேற்குக் கிளைமொழிகளைத், தென்கிழக்குக் கிளைமொழிகளில் இருந்து வேறுபடுத்துகின்றன. வடக்கு, மேற்குக் கோண்டிகளில் தொடக்க ஸ், அப்படியே இருக்க, தெற்கு, கிழக்குக் கோண்டிகளில் இது ஹ்; ஆக மாறியுள்ளது. சில கிளைமொழிகளில் இது முற்றாகவே இல்லாதுபோயுள்ளது. கிளைமொழிகளிடையே உள்ள வேறுபாடுகளில், தொடக்க ர், ல் ஆகவும், , என்பன ஆகவும் மாறியுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Beine, David K. 1994. A Sociolinguistic Survey of the Gondi-speaking Communities of Central India. M.A. thesis. San Diego State University. chpt. 1
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கோண்டி_மொழி&oldid=3170840" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிமுதற் பக்கம்வெ. இராமலிங்கம் பிள்ளைபாரதிதாசன்தமிழ்ஈரோடு தமிழன்பன்பி. கக்கன்அறிவியல் தமிழ்நந்திக் கலம்பகம்திருமூலர்சூரரைப் போற்று (திரைப்படம்)காமராசர்மூன்றாம் நந்திவர்மன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்எட்டுத்தொகைமுத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருநாவுக்கரசு நாயனார்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சிறப்பு:RecentChangesபிள்ளைத்தமிழ்குற்றாலக் குறவஞ்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவைந்தெழுத்துஉரைநடைஐஞ்சிறு காப்பியங்கள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருவள்ளுவர்கடையெழு வள்ளல்கள்ஐம்பூதங்கள்விநாயகர் அகவல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடு