கூகிள் ஐ.எம்.இ.

கூகிள் ஐ.எம்.இ (Google Input Method Editor) எனப்படும் உள்ளீட்டு முறைத் தொகுப்பான் என்பது கூகிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் கருவி ஆகும். இதைக் கொண்டு, பொதுவாகக் கணினிகளில் உள்ள ரோமானியத் தட்டச்சுப் பொத்தான்களைக் கொண்டே, பல்வேறு மொழிகளில் எழுத்துக்களை உள்ளீடு செய்ய முடியும்.

உள்ளீட்டு முறைத் தொகுப்பான்

உள்ளீடு மாற்று முறை

இயங்குதளங்கள்

தொகு

விண்டோஸ் 32 பிட் மற்றும் 64 பிட் ஆகியவற்றில் மட்டுமே தற்சமயம் இயங்கும் வண்ணம் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இம்மென்பொருளை தரவிறக்கம் செய்யும் போதே நாம் நமக்கு தேவையான மொழியினை தேர்ந்தெடுத்து தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முதன் முறை இதனை கணினியில் நிறுவ இணைய இணைப்பு தேவைப்படும். பின்னர் இணைய இணைப்பு இன்றியும் இம்மென்பொருளை நம்மால் பயன்படுத்த முடியும்.

மொழிகள்

தொகு

நேபாளி, அரபு, பெங்காலி, பெர்சியா (பர்ஸியன்), கிரேக்கம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது.

உள்ளீட்டு முறை

தொகு

இந்தக் கருவி உச்சரிப்பு சார்ந்த உள்ளீட்டு முறையை உபயோகிக்கிறது. உதாரணமாக அம்மா என்ற சொல்லை உள்ளிட, amma என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டும்.

மேலும் சில எழுத்துக்களை நாம் தட்டச்சு செய்த உடனேயே அந்த எழுத்து சார்ந்த பரிந்துரை வார்த்தைகளை இந்த மென்பொருள் நமக்கு கீழே காட்டும் அதில் இருந்து தேவையான வார்த்தைகளை நம்மால் உடனடியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்.

தொடக்க நிலையில் உச்சரிப்பு சார்ந்த யுனிகோட் முறையில் தட்டச்சு செய்ய விழைபவர்களுக்கு இந்த மென்பொருள் பயனுடையதாக இருக்கும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கூகிள்_ஐ.எம்.இ.&oldid=3696794" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்விஜய் (நடிகர்)சுப்பிரமணிய பாரதிகாமராசர்திவ்யா துரைசாமிபாரதிதாசன்சூழலியல்சிறப்பு:RecentChangesபெண் தமிழ்ப் பெயர்கள்சிலப்பதிகாரம்கண்ணதாசன்கள்ளக்குறிச்சிதிருக்குறள்அறிவியல் தமிழ்இயற்கை வளம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எத்தனால்ஐம்பெருங் காப்பியங்கள்வேளாண்காடு வளர்ப்புமனித உரிமைஎட்டுத்தொகைகியூ 4 இயக்கு தளம்சுற்றுச்சூழல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்நாடுபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஜெயம் ரவிசுற்றுச்சூழல் பிரமிடுசாராயம்வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972வேளாண்மைபாலைவனமாதல்விநாயகர் அகவல்அறுபடைவீடுகள்