கரவெட்டி

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

கரவெட்டி (Karaveddy) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் வடமராட்சி தெற்கு-மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இதன் எல்லைகளாக உடுப்பிட்டி, புலோலி, கரணவாய், நெல்லியடி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

கரவெட்டி
நாடுஇலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாண மாவட்டம்
பிரதேச செயலாளர் பிரிவுவடமராட்சி தென்மேற்கு

இங்குள்ள கோயில்கள் தொகு

  • கரவெட்டி அத்துளு அம்மன்
  • கரவெட்டி தச்சந்தோப்பு பிள்ளையார்
  • கரவெட்டி கிழக்கு கிழவிதோட்ட பிள்ளையார்
  • கரவெட்டி கிழக்கு நுணுவில் பிள்ளயார்
  • கரவெட்டி கிழக்கு யார்க்கரு பிள்ளையார்
  • கரவெட்டி மேற்கு வெல்லன் பிள்ளையார்

இங்குள்ள கல்லூரிகள் தொகு

இங்கு பிறந்த புகழ் பூத்தோர் தொகு

சிறப்புகள் தொகு

  • கரவை வேலன் கோவை - கரவெட்டி வேலாயுதபிள்ளை என்பவர் மேல் பாடப்பட்ட நூல். அதில் இருந்து ஒரு செய்யுள்:
"முத்தம் பொதியும் பவளந் திறந்து முறையினும்பேர் துத்தம்
பயின்மொழி யாற்சொல்லுஞ் சால்வழிச் சூழ்பெருகும்
நத்தம் பயிலுங் கரவையில் வேலனன் னாட்டிலுங்கன்
சித்தம் பயில்பதி சொல்லா திருக்குந்தெரிவையரே."
  • வடமராட்சி கட்டைவேலி நெல்லியடிப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக் கலாசாரக் கூட்டுறவுப் பெருமன்றம் - இலங்கையிலேயே இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்குமாக உழைக்கின்ற, செயற்படுகின்ற ஒரே பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் இதுவேயாகும். நூலக வசதி - ஒரு வருடத்தில் நூலகத்தில் அதிகமான புத்தகங்களை வாசிக்கின்றவர்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமும் உண்டு - நூல் வெளியீடு போன்ற பணிகளை இச்சங்கம் மாத்திரமே தொடர்ந்து செய்து வருகின்றது.
  • வடமராட்சி கரவெட்டி பகுதியிலை உள்ள சோனப்பு திடலில் அந்தக் காலத்தில் ஆண்டு தோறும் மாட்டுச் சவாரி நடக்கும்.
  • அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வளர்ந்த இடமான கரவெட்டி, இடதுசாரி சிந்தனைகளின் விதைநிலம். சமூக உட்கொடுமைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த மாக்சிசவாதிகள் நிறைந்த சிவப்பு மண் அது.
  • 1920, 30களில் 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது. உதாரணமாக, கரவெட்டியில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்)(குடியரசு கந்தப்பு) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார்.
  • கண்ணகி மதுரையை எரித்து விட்டு வந்து தங்கி நின்ற இடங்கள் வற்றாப்பளை அம்மன், மட்டுவில் பண்டிதலச்சி அம்மன், கரவெட்டி அத்துளு அம்மன், அல்வாய் முத்துமாரியம்மன் என்பது ஐதீகம்.
  • கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி யின் 3 பழைய மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பருத்தித்துறைத் தொகுதியில் பொன். கந்தையா, அதிலிருந்து பிரிக்கப்பட்ட உடுப்பிட்டி தொகுதியில் மு. சிவசிதம்பரம், கே. ஜெயக்கொடி ஆகியோர்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கரவெட்டி&oldid=3480470" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதேம்பாவணிசிறப்பு:Searchதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்முத்தொள்ளாயிரம்அண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குதமிழ்நிர்மலா சீதாராமன்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைவரலாறுதிருக்குறள்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாவேந்தர் பாரதிதாசன் விருதுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்பதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புலோ. முருகன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐஞ்சிறு காப்பியங்கள்தக்கன்ஒப்பிலக்கியம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பெண் தமிழ்ப் பெயர்கள்மரபுச்சொற்கள்திருவள்ளுவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தனிமங்களின் எண் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவை