ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவி, (Hogenakal Falls) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தருமபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 (வழி NH7) கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

ஒகேனக்கல் அருவி
ஒகேனக்கல் அருவி
ஒகேனக்கல் அருவி is located in தமிழ் நாடு
ஒகேனக்கல் அருவி
ஒகேனக்கல் அருவி is located in கருநாடகம்
ஒகேனக்கல் அருவி
ஒகேனக்கல் அருவி is located in இந்தியா
ஒகேனக்கல் அருவி
Map
அமைவிடம்கருநாடகம் மற்றும் தமிழ் நாடு
ஏற்றம்700 m (2,300 அடி)
நீளமான வீழ்ச்சியின் உயரம்20 m (66 அடி)

ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல, பல அருவிகளின் தொகுப்பாகும். 'உகுநீர்க்கல்' என்ற தமிழ்ச் சொல்லே மருவி 'ஒகேனக்கல்' என்றானது.ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு புகையும் கல்பாறை என்று பொருள் என்பர்.

பெயர் வரலாறு தொகு

தலைநீர் தொகு

தலைநீர் என்பது இந்த நீர்வீழ்ச்சியைக் குறிக்கும் சங்ககால வழக்கு. இதனைச் சூழ்ந்திருந்த நாடு தலைநீர் நாடு எனப்பட்டது. தகடூர் என்னும் தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி இதன் சங்ககால அரசன்.[1]

உகுநீர்க்கல் தொகு

ஒகேனக்கலின் பழைய பெயர் உகுநீர்க்கல் என்பதாகும். 1940ஆம் ஆண்டுவாக்கில் கூட தாழ்த்தப்பட்ட மக்களால் நடத்தப்பட்ட சேமன் சண்டை என்னும் தெருக்கூத்தில் கட்டியங்காரனாகிய கோமாளி, நான் கங்கையாடப் போரேன். அட, நான் குமரியாடப் போரேன் எனப் பாடும் சாமியாரைப் பார்த்து ஏன் பக்கத்திலிருக்கும் உகுநீர்கல்லுக்குப் போகக்கூடாதா என நகையாடுவான் என்பர். 1969ஆம் ஆண்டு சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்த புது இலக்கியப் பதிப்பகம் வெளியிட்ட குளிர் காவிரி என்னும் கவிதை நூல் இவ்வருவியை 100 பாடல்களில் வருணிக்கிறது. இதன் ஒன்பதாம் தலைப்பு உகுநீர்க்கல் உயிர்காவிரி எனத் தரப்பட்டுள்ளது.

உகுநீர்க்கல் உயிர்காவேரி
மிகுதானியம் தகவாய்வினை
பகுத்துண்பவர் எவராயினும்
மிகுநீர் அருள் மகவாய்க்கொள் கொளினே
உயிராய்ப் போற்றுவர் உயர்பண் பாடுவர்
தூயர்நீர் தெய்வத் தாய்நீ எனவே

என்பது இத்தலைப்பிலுள்ள முதற்பாடல். உகுநீர்க்கல் என்பதே ஒகேனக்கல் எனத்திரிந்து விட்டது. திப்பு சுல்தான் காலம் முடிய வரிவாங்கும் அதிகாரிகள் கன்னடம் பேசுபவர்களாக இருந்த காரணத்தால் தருமபுரி மாவட்டத்து ஊர்ப் பெயர்கள், மலைப்பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் ஆகியவற்றைக் கன்னடப் பெயர்களாக வருவாய்த்துறைப் பதிவேட்டில் பதிவு செய்தனர். அதை அப்படியே ஆங்கிலேயர் காலத்திலும் பின்பற்றினர். அது இப்போதுவரை தொடர்கிறது. [2]பரிசல் மூலம் சுற்றுலாப் பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள். எண்ணெய்க் குளியல் இங்கு பிரபலம்.

ஒகேனக்கல்

பரிசல் தொகு

ஒகேனக்கல் காட்சிக்கூடம் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. உண் துறை
    மலை அலர் அணியும் தலை நீர் நாடன் (புறநானூறு 390)
  2. தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட கருத்தரங்க மலர் 10.11.2009 பக்கம்54
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒகேனக்கல்_அருவி&oldid=3692486" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிமு. கருணாநிதிதமிழ்சுப்பிரமணிய பாரதிஎட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருக்குறள்பதினெண் கீழ்க்கணக்குஇந்திய மக்களவைத் தொகுதிகள்பாரதிதாசன்ர. பிரக்ஞானந்தாசிறப்பு:RecentChanges2024 இந்தியப் பொதுத் தேர்தல்வி. கே. பாண்டியன்ஐம்பெருங் காப்பியங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்கம்பராமாயணம்திவ்யா துரைசாமிநரேந்திர மோதிவெங்கடேஷ் ஐயர்பள்ளிக்கூடம்இளையராஜாபிள்ளைத்தமிழ்அறிவியல் தமிழ்அகநானூறுகம்பர்சினைப்பை நோய்க்குறிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தொல்காப்பியம்திருவள்ளுவர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ராசாத்தி அம்மாள்தமிழர் நிலத்திணைகள்