ஏ. எல். விஜய்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

ஏ. எல். விஜய் (A. L. Vijay, பிறப்பு: 18 சூன் 1979) இவர் இந்திய நாட்டு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். அவரது தந்தை ஏ. அழகப்பன் தயாரிப்பாளர் மற்றும் கவுன்சில் தலைவர் ஆவார். இவருக்கு உதயா என்ற சகோதரும் உண்டு. அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

ஏ. எல். விஜய்
பிறப்பு18 சூன் 1979 (1979-06-18) (அகவை 44)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட இயக்குனர்
நடன அமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்போது வரை
பெற்றோர்ஏ. எல். அழகப்பன்
வள்ளியம்மை
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்1
உறவினர்கள்உதயா (சகோதரன்)

ஆரம்ப வாழ்க்கை

தொகு

இவர் இந்திய திரைப்படத் துறையில் பிரபல இயக்குநர். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். அதன் மூலம் 2009ஆம் ஆண்டு சிறந்த கார்ப்பரேட் விளம்பர விருதை வென்றார். 2007ம் ஆண்டு அஜித் மற்றும் திரிஷா நடித்த கிரீடம் என்ற திரைப்படத்தில் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். 2008ஆம் ஆண்டு பொய் சொல்லப் போறோம் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்குனர். 2010ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் ஏமி சாக்சன் நடித்த மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனர் ஆனார். 2011ஆம் ஆண்டு விக்ரம், அனுஷ்கா, அமலா பால் மற்றும் சாரா அர்ஜுன் நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தையும், 2013ஆம் ஆண்டு விஜய் நடித்த தலைவா என்ற திரைப்படத்தை இயக்கினார்.

குடும்பம்

தொகு

இவர் தலைவா படத்தின் போது நடிகை அமலா பாலுடன் காதல் ஏற்பட்டு, 2014 ஆம் ஆண்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஐஸ்வர்யா என்ற பொதுநல மருத்துவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு துருவா விஜய் என்ற மகனும் உண்டு.[1]

திரைப்படங்கள்

தொகு
ஆண்டுதிரைப்படம்நடிகர்கள்மொழிகுறிப்புகள்
2007கிரீடம்அஜித் குமார், திரிஷா கிருஷ்ணன்தமிழ்மலையாளம் கிரீடம் மறு ஆக்கம் (1989 படம்)
2008பொய் சொல்ல போறோம்கார்த்திக் குமார், பியா பஜ்பைதமிழ்இந்தி கோஸ்லா கா கோஸ்லா படம் மறு ஆக்கம்
2010மதராசபட்டினம்ஆர்யா, ஏமி சாக்சன்தமிழ்பரிந்துரை, பிலிம்பேர் சிறந்த இயக்குநருக்கான விருது
பரிந்துரை, விஜய் சிறந்த இயக்குநர் விருது
2011தெய்வத்திருமகள்விக்ரம், சாரா அர்ஜுன், அனுஷ்கா ஷெட்டி, அமலா பால்தமிழ்பரிந்துரை, பிலிம்பேர் சிறந்த இயக்குநருக்கான விருது – தமிழ்
2012தாண்டவம்விக்ரம், அனுஷ்கா ஷெட்டி, ஏமி சாக்சன்தமிழ்
2013தலைவாவிஜய், அமலா பால்தமிழ்
2014சைவம்நாசர், சாரா அர்ஜுன், பாட்ஷா, ரே பால் மனோஜ், சண்முகராஜன்தமிழ்
2015இது என்ன மாயம்விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவ்யா ஷெட்டிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. Antara Chakraborthy, ed. (30, May 2020). Director AL Vijay blessed with a baby boy. The Indian Express. {{cite book}}: Check date values in: |year= (help)

வெளி இணைப்புகள்

தொகு

முகநூலில் ஏ. எல். விஜய்

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஏ._எல்._விஜய்&oldid=3954103" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: