விருந்தினர்
விருந்தினர் என்போர் விருந்தாளிகள். இவர்களை வடநூலார் ‘அதிதி’ என்பர். [1] தமிழ்நெறி வாழ்க்கையில் விருந்தினர் வெறுமனே விருந்துண்டு செல்பவர்கள் அல்லர். கற்பியல் வாழ்க்கையில் தலைவன், தலைவியர் கூடி வாழ உதவி புரியும் வாயில்களாகவும் விளங்கினர்.
- சொல்விளக்கம்
- விருந்து என்னும் சொல்லே விருந்தினரைக் குறிக்கும். [2]
- நூலுக்கு உரிய வனப்புகள் எட்டில் ஒன்று விருந்து (புதுமை) என்னும் வனப்பு
- அகவாழ்வில் விருந்தினர்
தலைவியின் ஊடலைத் தணிக்கும் வாயில்களில் ஒருவர் விருந்தினர். [3] விருந்து வந்தால் களவு ஒழுக்கமும் தடைபடும். [4]தலைவி ஊடாமல் இருந்தால் தலைவன் விருந்தினரோடு வருவது வழக்கம். [5]தலைவியின் மாண்புகளில் ஒன்று விருந்தோம்பல். [6]
- புறவாழ்வில் விருந்தினர்
இல்லறத்தார் பேணவேண்டிய ஐவருள் ஒருசாரார் விருந்தினர். [7] விருந்தோம்பல் பற்றித் திருக்குறள் சிறப்பாக எடுத்துரைக்கிறது.[8]
அடிக்குறிப்புகள் தொகு
- ↑ Atithi devo bhava Sanskrit: अतिथि देवो भवः; English: 'The guest is God' or 'Guest become God'
- ↑ தொல்காப்பியம் கிளவியாக்கம் 57
- ↑ தொல்காப்பியம் கற்பியல் 52
- ↑ தொல்காப்பியம் களவியல் 17
- ↑ தொல்காப்பியம் கற்பியல் 5-54
- ↑ தொல்காப்பியம் கற்பியல் 11
- ↑ தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தார் ஓம்பல் தலை – திருக்குறள் 43
- ↑
திருக்குறள் விருந்தோம்பல் அதிகாரம் 9
- பயிர் வளர்க்கும் வேளாண்மை போல விருந்தோம்பல் மக்களை வளர்க்கும் வேளாண்மை
- விருந்தினரை வைத்துக்கொண்டு தனித்துண்ணும் பழக்கம் விரும்பத் தகாதது.
- விருந்தினரை நாள்தோறும் பேணவேண்டும்.
- விருந்தினரை முக மலர்ச்சியுடன் பேணவேண்டும்.
- விருந்தினர் உண்டபின் எஞ்சிய உணவை உண்ணவேண்டும்.
- வந்த விருந்தினர் போய்விட்டால் புதிய விருந்தினர் வரவை எதிர்நோக்க வேண்டும்.
- விருந்தோம்பல் என்பது ஒருவகை வேள்வி
- இது துறவி செய்யும் வேள்வியை விட மேலானது.
- விருந்தோம்புதல் ஒரு செல்வம்.
- முகம் மலர்ந்து பேணாவிட்டால் விருந்தினர் குழைந்து போவர்.
- பயிர் வளர்க்கும் வேளாண்மை போல விருந்தோம்பல் மக்களை வளர்க்கும் வேளாண்மை
காண்க தொகு
தொகு | அகத்திணை மாந்தர் |
---|---|
அகத்திணைத் தலைவர்கள் | தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர் |
அகத்திணை வாயில்கள் | தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர் |
🔥 Top keywords: முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதேம்பாவணிசிறப்பு:Searchதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்முத்தொள்ளாயிரம்அண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குதமிழ்நிர்மலா சீதாராமன்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைவரலாறுதிருக்குறள்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாவேந்தர் பாரதிதாசன் விருதுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்பதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புலோ. முருகன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐஞ்சிறு காப்பியங்கள்தக்கன்ஒப்பிலக்கியம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பெண் தமிழ்ப் பெயர்கள்மரபுச்சொற்கள்திருவள்ளுவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தனிமங்களின் எண் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவை