பாலை (திணை)

பாலை

பாலை என்பது பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.[1] குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப்பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல், மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் மறவர் மற்றும் எயினர் எனப்பட்டனர்."முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்துநல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம்

பாலை நிலத்தின் பொழுதுகள் தொகு

இளவேனில், முதுவேனில், பின்பனி என்னும் பெரும் பொழுதுகளும் நண்பகல் என்னும் சிறுபொழுதும் பாலை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

பாலை நிலத்தின் கருப்பொருட்கள் தொகு

  • தெய்வம்: கொற்றவை
  • மக்கள்: எயினர் (வேட்டுவர்) ,விடலை, காளை,
  • பறவைகள்: பருந்து, கழுகு, புறா
  • மரங்கள்: உழிஞ, பாலை, இருப்பை
  • மலர்கள்: மராம்பு
  • பண்: பஞ்சுரப் பண் (பாலை) யாழ்
  • பறை : ஆறலை, சூறைகோள்
  • தொழில்: போர்தொழில் செய்தல் வேட்டையாடுதல்
  • உணவு: ஆறலைத்தலால் வரும் பொருள்
  • நீர்: கிணறு
  • விலங்கு: வலியிலந்த புலி, செந்நாய்
  • யாழ்: பாலையாழ்
  • ஊர்: குறும்பு

பாலை நிலத்தின் உரிப்பொருட்கள் தொகு

  • அக ஒழுக்கம் : பிரிதல்
  • புற ஒழுக்கம் : வாகை

மேற்கோள்கள் தொகு

  1. "ஐந்திணை".
தமிழர் நிலத்திணைகள்
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=பாலை_(திணை)&oldid=3830804" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதேம்பாவணிசிறப்பு:Searchதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்முத்தொள்ளாயிரம்அண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குதமிழ்நிர்மலா சீதாராமன்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைவரலாறுதிருக்குறள்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாவேந்தர் பாரதிதாசன் விருதுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்பதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புலோ. முருகன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐஞ்சிறு காப்பியங்கள்தக்கன்ஒப்பிலக்கியம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பெண் தமிழ்ப் பெயர்கள்மரபுச்சொற்கள்திருவள்ளுவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தனிமங்களின் எண் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவை