வைசாக் (மாதம்)

வைசாக் மாதம், (பஞ்சாபி மொழி: ਵੈਸਾਖ, ஆங்கில மொழி: Vaisakh) சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி இரண்டாவது மாதம். இம்மாதம் கிரகரிய நாட்காட்டியின் ஏப்ரல் 14 முதல் மே 14 வரையான 31 நாட்களை உள்ளடக்குகிறது. இது தமிழ் நாட்காட்டியின் சித்திரை மாதத்துடன் ஏறத்தாழப் பொருந்துகிறது. இக்காலம் பஞ்சாப் பகுதியில் அறுவடைக்காலம்.

வைசாகி சீக்கியர்களின் முக்கியமான பண்டிகை. இது வைசாக் மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இது ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதியோடு பொருந்தி வரும்.

வைசாக் மாதச் சிறப்பு நாட்கள்

தொகு
  • 1 வைசாக் (14 ஏப்ரல்) - வைசாகிப் பண்டிகை.
  • 3 வைசாக் (16 ஏப்ரல்) - குரு அங்காட் தேவர் இறையுடன் கலந்த தினம்.
  • 3 வைசாக் (16 ஏப்ரல்) - குரு அமர் தாஸ் குருப்பட்டம் பெற்ற தினம்.
  • 3 வைசாக் (16 ஏப்ரல்) - குரு ஹர் கிசன் இறையுடன் கலந்த தினம்.
  • 3 வைசாக் (16 ஏப்ரல்) - குரு தெக் பகதூர் குருப்பட்டம் பெற்ற தினம்.
  • 5 வைசாக் (18 ஏப்ரல்) - குரு அங்காட் தேவர் பிறந்தநாள்.
  • 5 வைசாக் (18 ஏப்ரல்) - குரு தெக் பகதூர் பிறந்தநாள்.
  • 19 வைசாக் (2 மே) - குரு அர்ஜன் தேவர் பிறந்தநாள்.

மேற்கோள்கள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=வைசாக்_(மாதம்)&oldid=2093267" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிகாமராசர்பாரதிதாசன்எத்தனால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)பன்னாட்டு யோகா நாள்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்யோகக் கலைகண்ணதாசன்விநாயகர் அகவல்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசாராயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிமுருகன்காரைக்கால் அம்மையார்வைணவ அடியார்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்யோகாசனம்தொல்காப்பியம்கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்பத்துப்பாட்டுசூன் 21கார்லசு புச்திமோன்