மெகாலோசாரஸ்

மெகாலோசாரஸ் என்னும் ஊர்வன வகையைச் சேர்ந்த தொன்மா 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த மிருகத்தின் எலும்புக்கூடு தொகுதிகள் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டு இங்கிலாந்து நாட்டின் காட்சி சாலையிலும், ஆகஸ்போர்டு பல்கலைகழக காட்சி சாலையிலும் வைக்கப்பட்டுள்ளது.

ஊர்வன இனத்தில் நீளமானது என்ற பெயரைக் குறிக்க "மெகாலோசாரஸ்” என்று அழைக்கப்படுகிறது. இந்த மிருகம் சுமார் 30 அடி நீளமும், உயரம் சுமார் 12 அடி.

மிக வலிமையான இரண்டு கால்களின் உதவியால் இதன் கணத்த உடல் தாங்கப்பட்டு இருந்திருக்கிறது. முன் இரண்டு கால்கள் மிகச் சிறியதாக இருந்தது, அதனால் அதற்கு எந்தப் பயனும் இருந்திருக்காது என்று கருதுகின்றனர்.

மற்ற மிருகங்கள் போல் தலை நிமிர்ந்து நிற்காமல் ஒரு படுக்கை வசத்திலேயே வலிமையான இரண்டு கால்களால் தாங்கப்பட்டு, தலைப் பகுதியும் உடல் பகுதியும் சமமாக இருக்க இதன் உடலின் பின் பகுதியான வால் திண்மையான நீண்டு இருந்திருக்கிறது.

குனிந்த நிலையிலேயே இரண்டு கால்களின் உதவியால், ஓடவோ நடக்கவோ செய்திருக்க வேண்டும் என்று தொல்லுயிர் அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதன் பொரிய தலையும் கூர்மையான பற்களும் இது ஒரு மாமிசம் உண்ணும் விலங்காக வாழ்ந்திருக்கிறது என்று தெரிகிறது.

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மெகாலோசாரஸ்&oldid=3730420" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: சுப்பிரமணிய பாரதிசிறப்பு:Searchமுதற் பக்கம்பவன் கல்யாண்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்பத்துப்பாட்டுபெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்ஐம்பெருங் காப்பியங்கள்தேம்பாவணிகண்ணதாசன்பதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைநா. சந்திரபாபு நாயுடுகுழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்திருக்குறள்அண்ணாமலை குப்புசாமிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்என். டி. ராமராவ்சிலப்பதிகாரம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிரஞ்சீவி (நடிகர்)ஐஞ்சிறு காப்பியங்கள்கோரி ஆன்டர்சன்குழந்தைத் தொழிலாளர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்நந்தமூரி பாலகிருஷ்ணாதமிழிசை சௌந்தரராஜன்தமிழ்நாடுதிவ்யா துரைசாமிஉயிர்மெய் எழுத்துகள்திருவள்ளுவர்கம்பர்