முழுதளாவியம்

முழுதளாவியம் (Holism) மற்றும் முழுதளாவிய ஆகிய சொற்கள் 1920களின் ஆரம்பத்தில் ஜான் ஸ்முட்ஸ் என்பவரால் முதலில் பயன்படுத்தப்பட்டன.

ஒக்ஸ்போட் ஆங்கில அகராதியில் கண்டுள்ளபடி ஸ்முட்ஸின் முழுதளாவியத்துக்கான வரைவிலக்கணம் பின்வருமாறு உள்ளது: "படைப்புசார் படிமலர்ச்சி (creative evolution) ஊடாக, பகுதிகளின் கூட்டுத்தொகையிலும் பெரிதான முழுமையை உருவாக்க முயலும் இயற்கையிலுள்ள போக்கு"

குறிப்பு:ஒன்றுலும் "பெரிதான" என்னும் சொல் பொருள் கொண்டதாக அமைய வேண்டின் ஒரு அளவீடு தேவைப்படும் என்பது வெளிப்படை. எனவே மேற்கண்டது வரைவிலக்கணம் என்பதிலும் பார்க்க ஒரு கருத்து (suggestion) என்றே கொள்ளவேண்டும். இப் பொருளற்ற பகுதியை நீக்கிவிட்டால், முழுதளாவியம் என்பது, "படைப்புசார் படிமலர்ச்சியூடாக முழுமையை உருவாக்கமுயலும் இயற்கையிலுள்ள போக்கு" எனப் பெறப்படுகின்றது. முழுதளாவியம் என்பது படைப்புவாதம் (creationism), படிமலர்ச்சிவாதம் (evolutionism) என்பவற்றின் ஒருங்கிணைப்பு என்று அவதானிக்கலாம்.

தற்போது விளங்கிக் கொண்டுள்ளபடி, முழுதளாவியம் என்பது ஒரு முறைமையின் இயல்புகளை அவற்றின் கூறுகளின் இயல்புகளின் கூட்டுத்தொகை மூலம் மட்டும் தீர்மானிக்கவோ விளங்கிக் கொள்ளவோ முடியாது என்ற கருத்தாகும். அறிவியல் reductionism ஐ முன்னெடுத்துச் செல்பவர்கள் இது பேராசை reductionism கொள்கைக்கே எதிரானது என்று கூறுகின்றனர். இது பெரும்பாலும் reductionism என்பதற்கு எதிரானதாகக் கொள்ளப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=முழுதளாவியம்&oldid=2740180" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: