போர்க் கப்பல்

போர்க் கப்பல் என்பது போர் புரிவதற்காகச் சிறப்பாகக் கட்டப்படும் கப்பல் ஆகும். இவை வணிகக் கப்பல்களைவிட வேறுபட்ட முறையில் அமைக்கப்படுகின்றன. ஆயுதங்களைக் கொண்டிருப்பது மட்டுமன்றி இவை, சேதங்களைத் தாங்கக் கூடியவையாகவும், வேகமாகச் செல்லத்தக்க வகையிலும், இலகுவாகத் திசைமாற்றத்தக்க வகையிலும் உருவாக்கப்படுகின்றன. போர்க் கப்பல்கள், பொதுவாக ஆயுதங்கள், அவற்றுக்குத் தேவையான வெடிபொருட்கள், போர் வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்கின்றன. போர்க் கப்பல்கள் பொதுவாக ஒரு நாட்டின் கடற்படைக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன. தனியாரும், நிறுவனங்களும் கூடச் சில வேளைகளில் போர்க் கப்பல்களை வைத்துப் பேணுவது உண்டு.

இளைய வில்லெம் வான் டி வெல்டே வரைந்த " பீரங்கிச் சூடு" என்னும் தலைப்பிட்ட ஓவியம். 17 ஆம் நூற்றாண்டின் ஒல்லாந்தக் கப்பல் ஒன்றைக் காட்டுகிறது.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=போர்க்_கப்பல்&oldid=3910710" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிமு. கருணாநிதிதமிழ்சுப்பிரமணிய பாரதிஎட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருக்குறள்பதினெண் கீழ்க்கணக்குஇந்திய மக்களவைத் தொகுதிகள்பாரதிதாசன்ர. பிரக்ஞானந்தாசிறப்பு:RecentChanges2024 இந்தியப் பொதுத் தேர்தல்வி. கே. பாண்டியன்ஐம்பெருங் காப்பியங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்கம்பராமாயணம்திவ்யா துரைசாமிநரேந்திர மோதிவெங்கடேஷ் ஐயர்பள்ளிக்கூடம்இளையராஜாபிள்ளைத்தமிழ்அறிவியல் தமிழ்அகநானூறுகம்பர்சினைப்பை நோய்க்குறிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தொல்காப்பியம்திருவள்ளுவர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ராசாத்தி அம்மாள்தமிழர் நிலத்திணைகள்