தங்கப் பந்து (பிஃபா)

பிஃபா தங்கப் பந்து (FIFA Ballon d'Or,பிரெஞ்சு உச்சரிப்பு: ​[balɔ̃ dɔʁ], பிஃபா பாலோன் தி'ஓர்) என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கு ஃபிஃபாவினால் வழங்கப்படும் பரிசாகும். பரிசளிக்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் உலகிலேயே மிகச் சிறந்த அளவில் விளையாடிய வீரருக்கு இது வழங்கப்படுகிறது. இதற்கென சிறப்பாக ஓட்டெடுப்பு நடைபெறும்; இதில் உலகின் தேசிய அணிகளின் தலைவர்களும், பயிற்சியாளர்களும் மற்றும் பத்திரிகையாளர்களும் ஓட்டளிப்பர். [1][2]

முதல் மூன்று தங்கப் பந்து (பிஃபா) விருதுகளைப் பெற்ற லியோனல் மெஸ்ஸி
சூலை,2010-இல் தங்கப் பந்து (பிஃபா) விருதை உருவாக்கியதற்கான ஒப்பந்தத்துடன் ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர். இடம்: ஜோகானஸ்பேர்க்

பிரெஞ்சுக் கால்பந்தின் பாலோன் தி'ஓர் மற்றும் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் ஒன்றிணைத்து 2010-முதல் வழங்கப்படுகிறது. இத்தகைய ஒன்றிணைப்புக்குப் பின்னர் முதன்முதலில் இவ்விருதை வென்றவர் லியோனல் மெஸ்ஸி ஆவார். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளும் இவரே இவ்விருதைக் கைப்பற்றினார். 2013-க்கான தங்கப் பந்து (பிஃபா) விருதை வென்றவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். 2010-இல் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருதை, பாலோன் தி'ஓருடன் இணைத்த பின்னர், பெண்களுக்கு மட்டும் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது.

வெற்றியாளர்கள் தொகு

2010 வரை, உலகின் சிறந்த காற்பந்தாட்ட வீரருக்கு பிரெஞ்சுப் புட்பாலின் பாலோன் தி'ஓர் அல்லது ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வந்தது.
ஆண்டுமுதல்வர்இரண்டாமவர்மூன்றாமவர்
2010 லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா) ஆந்த்ரெ இனியஸ்தா (பார்சிலோனா) சேவியர் எர்னாண்டசு (பார்சிலோனா)
2011 லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா) கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட்) சேவியர் எர்னாண்டசு (பார்சிலோனா)
2012 லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா) கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட்) ஆந்த்ரெ இனியஸ்தா (பார்சிலோனா)
2013 கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட்) லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா) பிராங்க் ரிபெரி (பேயர்ன் மியூனிக்)

விளையாட்டு வீரர்களின் வெற்றிகள் தொகு

விளையாட்டாளர்முதலிடம்இரண்டாமிடம்மூன்றாமிடம்
1 லியோனல் மெஸ்ஸி420
2 கிறிஸ்டியானோ ரொனால்டோ230
3 ஆந்த்ரெ இனியஸ்தா011
4 சேவியர் எர்னாண்டசு002
5 பிராங்க் ரிபெரி001

நாடுகள் பெற்ற வெற்றிகள் தொகு

நாடுமுதலாமிடம்இரண்டாமிடம்மூன்றாமிடம்
1  அர்கெந்தீனா4 (2010, 2011, 2012,2014)1 (2013,2014)0
2  போர்த்துகல்2 (2013,2014)2 (2011, 2012,2013)0
3  எசுப்பானியா01 (2010)3 (2010, 2011, 2012)
4  பிரான்சு001 (2013)

காற்பந்துக் கழகங்களின் வெற்றிகள் தொகு

காற்பந்துக் கழகம்முதலாமிடம்இரண்டாமிடம்மூன்றாமிடம்
1 பார்சிலோனா3 (2010, 2011, 2012)2 (2010, 2013)3 (2010, 2011, 2012)
2 ரியல் மாட்ரிட்1 (2013)2 (2011, 2012)0
3 பேயர்ன் மியூனிக்001 (2013)
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=தங்கப்_பந்து_(பிஃபா)&oldid=3669538" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்முள்ளிவாய்க்கால் நினைவு நாள்திருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறப்பு:RecentChangesசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பதினெண் கீழ்க்கணக்குவிநாயகர் அகவல்பெண் தமிழ்ப் பெயர்கள்இந்திய அரசியலமைப்புசுசித்ராதமிழ்நாடுஎட்டுத்தொகைவேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஈ. வெ. இராமசாமிசிலப்பதிகாரம்அறுபடைவீடுகள்ஜி. வி. பிரகாஷ் குமார்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஐம்பெருங் காப்பியங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்திவ்யா துரைசாமி2024 இந்தியப் பொதுத் தேர்தல்கம்பராமாயணம்இராமலிங்க அடிகள்பிள்ளைத்தமிழ்கார்த்திக் குமார்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அம்பேத்கர்திரு. வி. கலியாணசுந்தரனார்சுற்றுலாகார்லசு புச்திமோன்