இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965

இலங்கை அரசாங்கத் தேர்தல்கள்

இலங்கையின் 6வது நாடாளுமன்றத் தேர்தல் 1965 மார்ச் 22 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.

இலங்கையின் 6வது நாடாளுமன்றத் தேர்தல், 1965

← 1960 (சூலை)22 மார்ச் 19651970 →

இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு 151 இடங்கள்
பெரும்பான்மைக்கு 76 இடங்கள் தேவை
 First partySecond party
 
தலைவர்டட்லி சேனநாயக்காசிறிமாவோ பண்டாரநாயக்கா
கட்சிஐக்கிய தேசியக் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
தலைவரான
ஆண்டு
19521960
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
டெடிகமைஅத்தனகலை
முந்தைய
தேர்தல்
3075
வென்ற
தொகுதிகள்
6641
மாற்றம்3634
மொத்த வாக்குகள்1,590,9291,221,437
விழுக்காடு39.31%30.18%

முந்தைய பிரதமர்

சிறிமாவோ பண்டாரநாயக்கா
இலங்கை சுதந்திரக் கட்சி

பிரதமர்-தெரிவு

டட்லி சேனநாயக்கா
ஐக்கிய தேசியக் கட்சி

பின்னணி தொகு

1964 டிசம்பரில் லேக்ஹவுஸ் பத்திரிகைகள் தேசியமயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து சில உறுப்பினர்கள் வெளியேறியதை அடுத்து சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசு நாடாளுமன்றத்தில் பலம் இழந்தது. பண்டாரநாயக்காவின் தாராள தேசியமயமாக்கல் கொள்கை காரணமாக இலங்கைத் தீவின் வணிக சமூகத்தினரின் அதிருப்திக்கு அவர்கள் ஆளாக வேண்டி வந்தது. இதனால் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்தது. தீவிர உணவுப் பற்றாக்குறையால் உணவுப் பங்கீட்டு முறை நாட்டில் அமுல் படுத்தப்பட்டது.

சுதந்திரக் கட்சிக்கும் அவர்களுன் மார்க்சியக் கூட்டணிக்கும் எதிராக தேசிய முன்னணி ஒன்றை அமைக்கவிருப்பதாக ஐதேக வாக்குறுதி அளித்தது. சிங்களத் தேசியவாதிகளுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என ஐதேக தலைவர் டட்லி சேனநாயக்கா வாக்குறுதி அளித்தார்.

முடிவுகள் தொகு

ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. ஆனாலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார்.

கட்சிவேட்பாளர்கள்வாக்குகள்%இடங்கள்
 ஐக்கிய தேசியக் கட்சி1161,590,92939.3166
 இலங்கை சுதந்திரக் கட்சி1011,221,43730.1841
 இலங்கைத் தமிழரசுக் கட்சி20217,9145.3814
 லங்கா சமசமாஜக் கட்சி25302,0957.4710
 இலங்கை சுதந்திர சோசலிசக் கட்சி32130,4293.225
 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி9109,7542.714
 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்1598,7462.443
 மகாஜன எக்சத் பெரமுன6196,6652.391
 தேசிய விடுதலை முன்னணி1018,7910.461
ஏனையோர்106259,9606.426
செல்லுபடியான வாக்குகள்4954,046,720100.00151
நிராகரிகக்ப்பட்ட வாக்குகள்
பதிவான மொத்த வாக்காளர்கள்
மொத்த வாக்காளர்கள்13,821,918
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்4,710,887
Turnout281.13%
Source: Sri Lanka Statistics
1. பல-அங்கத்தவர் தொகுதிகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
2. கொழும்பு தெற்குத் தொகுதியில் ஜே. ஆர். ஜெயவர்தனா (ஐதேக), பெர்னார்ட் சொய்சா (லசசக) ஆகியோர் போட்டியின்றித் தெரிவாகினர்.

மேற்கோள்கள் தொகு

  • "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2011-10-30.
  • "1965 General Election Results". LankaNewspapers.com.
  • "Table 36 Parliament Election (1965)". Sri Lanka Statistics. 10 February 2009.
  • Rajasingham, K. T. (15 December 2001). "Chapter 19: Anguish and pain". Sri Lanka: The Untold Story. Asia Times. Archived from the original on 8 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  • Rajasingham, K. T. (22 December 2001). "Chapter 20: Tamil leadership lacks perspicuity". Sri Lanka: The Untold Story. Asia Times. Archived from the original on 4 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
🔥 Top keywords: முத்தொள்ளாயிரம்தேம்பாவணிஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புபாவேந்தர் பாரதிதாசன் விருதுதினத்தந்திதாதாசாகெப் பால்கே விருதுஔவையார் (சங்ககாலப் புலவர்)கிறிஸ்துவின் இரண்டாம் வருகைசிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிபதினெண் கீழ்க்கணக்குகரகாட்டம்முதற் பக்கம்சத்திய சோதனை (நூல்)சுப்பிரமணிய பாரதிசுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்திருக்குறள்மனோன்மணீயம்உத்தர காண்டம்நன்னெறி (நூல்)தமிழ்த்தாய் வாழ்த்து (புதுச்சேரி)அசோகர் கல்வெட்டுக்கள்பாரதிதாசன்வெண்பாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கிசான் கடன் அட்டைதமிழ்இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்நிர்மலா சீதாராமன்புறநானூறுஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிராவிட மகாஜன சபைதெருக்கூத்துஎட்டுத்தொகைமுதலாம் இராஜராஜ சோழன்நிதி ஆயோக்